
மேகவண்ணத்தில் அம்மாவுக்குப் பெருமோகம்
இப்போதெல்லாம் மாலைப்பொழுதுகளில் ஒரு இரண்டு மணி நேரம் நடப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. கிடைக்கிறது என்று சொல்வதை விட நான் அந்த வாய்ப்பை வலிந்திழுந்து ஏற்படுத்திக் கொள்கிறேன். முதல் சில நிமிடங்களுக்குத்தான் ´நடக்கவா விடவா` எனக் கால்கள் தடுமாறும். அதன் பின் நதி நீர் போல் நடை என்னை அழைத்துச் செல்லும். நான் நடப்பேன். மிகவும் விருப்பத்தோடு அந்த நேரத்தை எடுத்துக் கொண்டு நடப்பேன். அது எந்தவித அழுத்தங்களும் இல்லாத, யாரும் என்னிடம் இருந்து பறித்து விட முடியாத எனக்கே எனக்கான நேரம். காற்று வீசும். சூரியன் ஒளிரும். பாதையோரங்களில் பூக்களும் செடிகளும் செழித்திருக்கும். பச்சைப் பசேலென புல்வெளி பரந்திருக்கும். மேலும்
சாதலும் புதுவது அன்றே!
எனது மரணத்தைப் பற்றிய சில கற்பனைகளும் ஆசைகளும் (ஆம்! ‘ஆசைகள்’) உண்டு எனக்கு. இதுவரை தனது மரணம் குறித்த விருப்பங்களை யாரேனும் இப்படி அங்கதத்தில் எழுதி வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. இதை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதா வெளிப்படுத்த முடியும்? எதற்கும் இப்போதே எழுதி வைத்துவிடுவோம். அகால மரணம், நரைகூடி கிழப்பருவம் எய்தி ´போதும் போதும்` என வாழ்ந்த பின்னான மரணம், திடீர் மரணம், நெடுநாள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு பின் தழுவப்பட்ட மரணம்…எத்தனை எத்தனை வகைகள்? கண்டிப்பாய் இறுதியாகக் கூறப்பட்ட வழியில் எனது கடைசி மூச்சை விட விரும்பவில்லை. எனக்கானவர்கள் நூறாம் அகவையையும் தாண்டி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் என் மரணம் நிகழ வேண்டும். மேலும்
நினைவழியா நாட்கள் (மொறிஸ்)
1988 இன் முற்பகுதியாக இருக்க வேண்டும். திகதி ஞாபகம் இல்லை. இந்திய இராணுவம் `மொறிஸ் யார்? மொறிஸ் எங்கே இருக்கிறான்? மொறிஸ் பெரியவனா? சிறியவனா? ஆஜானபாகுவான தோற்றம் கொண்டவனா?´ என்று எதுவுமே தெரியாமல் மொறிஸைத் தேடி பேயாய் அலைந்த நேரம். அன்று மொறிஸ் ஓடி வந்து குளித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எமது கிணற்றடியில் நின்று பார்க்கத் தெரிந்த கிழக்குப் பக்க வீதியால் டிறக் வண்டி ஒன்று கிறீச்சிட்ட வேகத்துடன் ஓடி வந்தது. `ஓ...´ மொறிஸ் கதிகலங்கினான். குளித்த குறையில் வாளியைப் ´படார்` என்ற சத்தத்துடன் விட்டு விட்டு சரத்தை மாற்றிக் கொண்டு காற்றாய்ப் பறந்து சென்றான். சிறிது நேரத்தில் கேற்றைத் திறந்து கொண்டு திரும்ப வந்தான். மேலும்
BLOCK PARTY
BLOCK PARTY என்ற சிறார்களுக்கான ஆங்கிலப் புத்தகம் இந்த வாரம் வெளிவந்திருக்கிறது. Playing blocks சிறார்கள் விளையாட்டை முன்வைத்து, மிக இலகுவான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் புத்தகத்தை Julian Cappelli எழுதியிருக்கிறார். புத்தகத்துக்கான ஓவியங்கள் மூனாவால் வரையப்பட்டிருக்கின்றன. கைளைத்தட்டி, ஆடிப்பாடி குதூகலிப்புடன், ஒன்று முதல் பத்துவரை எண்ணுதல், வார்த்தைகளை உச்சரித்தல், மிருகங்கள் பறவைகளைத் தெரிந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை 34பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் சிறார்களுக்கு மிக மிக எளிதாகச் சொல்லித் தருகிறது. 2020இல் Julian Cappelliயின் The missing cup cake என்ற சிறார்களுக்கான புத்தகம் வெளிவந்திருந்தது. The missing cup cake, Block Party ஆகிய சிறார்களுக்கான இரண்டு புத்தகங்களும் Amazone இல் கிடைக்கின்றன... மேலும்
பெருநினைவின் சிறு துளிகள்
பல இடிதாங்கிய மடி ஒன்று நாம் கடந்துவந்த காலத்தை படிப்பதற்கும்; அவற்றை எதிர்கால சந்ததியினர் அறிவதற்குமான ஒரு சிறந்த படைப்பே பெருநினைவின் சிறு துளிகள் எனும் இந்நூல். இந்த நூலை ஆக்கியவர் திருமதி.சிவா தியாகராஜா (23.04.1934) ஈழத்தில் பருத்தித்துறை, புலோலி மேற்கு, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது முழுப்பெயர் சிவகாமசுந்தரி. இவரை சிவா,சுந்தரி,மொறிஸ் அம்மா என்றெல்லாம் அழைப்பார்கள். 1998 இலிருந்து யேர்மனியில் வாழ்ந்து வரும் இவர் 1999 இலிருந்து தமிழாலய ஆசிரியராகப் பணியாற்றி புலத்திலும் தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தவர். தேசப்பற்று மிகுந்த இவர் தனது எட்டுப்பிள்ளைகளில் மூவரை (பிறேமராஜன் (தீட்சண்யன்) பரதராஜன் (மொறிஸ்) பாலசபாபதி (மயூரன்) ஈழவிடுதலைப்போருக்கு ஈந்தவர்...மேலும்
என் கனவுகளிலும் நினைவுகளிலும்..!
அன்று மொறிஸ் சற்றுத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தான். அவன் வரும் போது நேரம் மதியம் ஒரு மணியிருக்கும். அன்றைக்கு அவனின் முகத்தில் யோசனை நிறைந்திருந்தது. திருநாவுக்கரசு மாஸ்ரரின் மனைவி தேவியும் அவவின் தங்கையுமாக சோறு கறி சமைத்து, எனக்கும் அவனுக்கும் அன்போடு மதியஉணவு பரிமாறினார்கள். அவனின் யோசனை நிறைந்த முகம் என் மனதை என்னவோ செய்தது. நிறையக் கதைக்க முடியாமல் எங்கள் இருவரது மனங்களும் சோர்வுடன் இருப்பது போல் தோன்றியது. அன்று மொறிஸ் சற்றுத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தான். அவன் வரும் போது நேரம் மதியம் ஒரு மணியிருக்கும். அன்றைக்கு அவனின் முகத்தில் யோசனை நிறைந்திருந்தது...மேலும்
குதியைச் சரியாக் கழுவு மேனை
வாழ்வில் சில பழக்கவழக்கங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து விட முடிவதில்லை. எனது இந்தப் பழக்கமும் அப்படித்தான்... "சுத்தம் சுகம் தரும்" இது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு மந்திரம் போல அம்மாவின் வாயிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. கூடவே “பொய் சொல்லாதே. களவெடுக்காதே. பிச்சையெடுக்காதே“ என்றவைகளும் அவ்வப்போது மந்திரமாக ஒலித்தன. இந்தச் சுத்த விடயத்தை மந்திர உச்சாடனத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், செயலிலும் அம்மா எப்போதும் கையாண்டு கொண்டே இருப்பா. கூட்டல், கழுவல், துடைத்தல் என்பன ஓயாது எங்கள் வீட்டில் நடந்து கொண்டேயிருக்கும்...மேலும்
Dr. சிதம்பரப்பிள்ளை தவசீலன்
அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் வாழும் மருத்துவர் தவசீலன் (Dr Sithamparapillai Thavaseelan) அவர்கள் தான் பணியாற்றும் மருத்துவத்துறையில் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் Queen’s Birthday 2020 Honours List யில் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை நேற்று முன்தினம் (8 June 2020) பெற்றுள்ளார். மருத்துவர் தவசீலன் பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்... மேலும்
காஸ்ரோ (வீ.மணிவண்ணன்)
எனக்கு முன்னால் சில அடிகள் இடைவெளியில், ஒரு கதிரையில் காஸ்ரோ (வீ.மணிவண்ணன்) அமர்ந்திருந்தார். கஸ்ரோவுக்கு இடுப்புக்குக் கீழே இயக்கமில்லை என்பதை நான் முன்பே கேள்விப்பட்டிருந்தேன். ஒரு விடயத்தைக் கேள்விப்படுவதற்கும் நேரே பார்ப்பதற்கும் இடையில் உள்ள பரிமாணங்கள் வேறு வேறு. இடுப்புக்குக் கீழே உணர்வுகள் இல்லாமல், சிறு சிறு விடயத்திற்கும் மற்றையவர்களின் உதவியை நாட வேண்டிய நிலையில் இந்த வாழ்வு எப்படி இருக்கும்? நான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனது எண்ணங்கள் சுற்றிச் சுற்றி கஸ்ரோவின் உடலைப் பற்றியே இருந்தன. அவரைப் பார்க்க மலைப்பாகக் கூட இருந்தது. அவர் இருந்த கதிரைக்குக் கீழே வயர்கள் ஓடிக்கொண்டிருந்தன. இது ஒரு வாழ்வா என்ற யோசனை கூட வந்தது... மேலும்
இசை ஏன் இளைய சமுதாயத்தைக் கூடுதலாகக் கவர்கிறது!
ஒரு மனிதனின் மூளையில் அவன் இளமைப் பருவத்தில் கேட்டு, ரசித்து அவனுக்கு மிகுந்த புத்துணர்ச்சியைக் கொடுத்த இசைகளும், பாடல்களும் எந்தக் காலத்திலும் அழியாமல் பதியப்பட்டிருக்கும். எந்த வயதிலும் அவன் அதை நினைவு கூரக்கூடியதாக இருக்கும். read more
பால்வினை
பெண்களே ஒன்று திரளுங்கள். நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை ஒவ்வொரு வயதிலும் ஆண்களாலும் சமூகத்தாலும் ஒவ்வொரு விதமாகப் பயன் படுத்தப் படுகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எதையும் உங்கள் பிரச்சனையில்லை என்று சொல்லி ஒதுங்கி விடாதீர்கள். read more
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…
படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு. வெங்கடேஸ், எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன். read more

விண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே!!
01.05.1989 இதே நாள், இதற்கு முதல் நாளில் பருத்தி மண் தன் குதூகலத்தை இழந்து கொண்டது, யாரும் ஏதிர்பார்க்கவும் இல்லை, எனக்கோ வயது பத்து. சப்பாத்தி மணம் எங்களது ஒழுங்கையெல்லாம் மணந்தது. read more

நானும் காத்திருக்கிறேன்
அம்மாவிடம் ஒரு தரம் போனால் என்ன என்ற நப்பாசை நேற்றும் வந்தது. அம்மா நான் இருக்கும் இடத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தொலைவில்தான் இருக்கிறா. ஆனாலும் அம்மாவிடம் போய் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. read more
பிறேமராஜன் மாஸ்டர்
ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன். பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள் , தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது... read more
அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து
எழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது. யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது. பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார். read more
கப்டன் மொறிஸ்
நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்! மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன்! ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே" என்றான். அவன்தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன்... read more
கப்டன் மயூரன்
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். read more
எடுத்தாளும் எழுத்தாளன் உளி
துமிலனுடன் ஒரு நேர்காணல்
துமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் . read more
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்
பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில்... read more
தலைவருடன் சில மணிப் பொழுதுகள்
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! read more