அந்தத் தொலைபேசி அழைப்பு

அப்போதெல்லாம் இப்போது போல வட்ஸ்அப், வைபர், மெசெஞ்சர்… என்று எதுவுமே இருக்கவில்லை. கைத் தோலைபேசி கூட இல்லை. வீட்டுத் தொலைபேசியில் விரல் விட்டு ஒவ்வொரு எண்ணாகச் சுற்றித்தான் யாருடனாவது தொலைபேச முடியும். யேர்மனி யிலிருந்து ஊரில், ஆத்தியடியில் இருக்கும் அம்மாவுடன் தொலை பேச விரும்பினால் அப்படி …

அந்தத் தொலைபேசி அழைப்பு Read More

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே!

Platform ரைல்ஸ் பெரிய பெரிய சதுரங்களாக, நீளத்துக்கும் பெட்டிகளை அடுக்கி விட்டது போல நீண்டு பரந்து இருந்தன. நான் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத…

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே! Read More

அந்த மௌன நிமிடங்களில்…

நூற்றுக் கணக்கான கிலோ மீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.
தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக…

அந்த மௌன நிமிடங்களில்… Read More
Sivagamasunthary. Siva Thiyagaarajah, அம்மாவின் தையல் மெஷின்,

அம்மாவின் தையல் மெஷின்

பராமரிப்பு நிலையத்துக்குப் போய் உடல் தேறி, நடமாடித் திரியத் தொடங்கிய ஒரு பொழுதில் அம்மா கேட்டா “என்ரை தையல் மெசின் எங்கை? அதைக் கொணர்ந்து தா. நான் தைக்கோணும்“ என்று. அம்மாவின் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தையல் மெசினிக்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு. ஊரில் இருந்த போதே அம்மா நன்றாகத் தைப்பா…

அம்மாவின் தையல் மெஷின் Read More

மூன்று சுற்று

நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுதொன்றில் அம்மா கூப்பிட்டுச் சொன்னா “குக்கருக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது, ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வா” என்று. அப்போது எனக்கு பத்து வயது இருக்கலாம். அல்லது அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். நினைவு படுத்திக் கொள்ள முடியவில்லை…

மூன்று சுற்று Read More

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…

அன்று 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் திகதி. தாயகத்தில் அமைதியாக இருந்த குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டு விட்ட காலம் அது. எங்கள் வீடும் அப்போது கல்லெறியப்பட்ட குளமாய்த் தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குட்டித் தங்கை பாமாவின் 13 ஆவது பிறந்த நாளை அதாவது ரீன்ஏஜ் இல் காலடி எடுத்து வைக்கும் அவளின் பிறந்தநாளைக் கொண்டாடாமல்…

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி… Read More