புதனும் புதிரும் – மூனா (நூல்)

அடுத்தடுத்து இரண்டு மரணங்கள். அதில் ஒன்று விபத்து, மற்றது கொலை, அதுவும் இரண்டும் சிறிய இடைவெளிகளில் உள்ள வீடுகளில் நடந்ததுள்ளன. இதையிட்டு ஸ்வேபிஸ் ஹால் நகரம் வெலவெலத்துப் போயிருந்த நேரத்தில், 25.01.2023 அன்று, அட அதுவும் கூட ஒரு புதன் கிழமைதான்,

புதனும் புதிரும் – மூனா (நூல்) Read More

உன்னைக் கண்டு நானாட…

அன்றிரவு சப்பல் அடி. பூவரசந்தடியா, கிளிசரியாத்தடியா அல்லது வாதநாரயணித்தடியா என்பது ஞாபகத்தில் இல்லை. மெல்லிய சுள்ளிப் பச்சைத்தடி. அம்மா முதலில் ஆத்திரம் தீரு மட்டும் விளாசித் தள்ளி விட்டா. பின்னர் என்னை அடித்ததற்காகவும் நான் காதலிப்பதற்காகவும் அழுது கொண்டிருந்தா. நான் அடியின் …

உன்னைக் கண்டு நானாட… Read More

யார் மனதில் யார் இருப்பார்..!

பிரியமானவர்களோ அன்றில் முக்கியமான வர்களாக நாம் கருதுபவர்களோ எம்மைக் கண்டு கொள்ளாதிருப்பதை விட, எம் மேல் பிரியமானவர் களையோ அன்றில் எம்மை நேசிப்பவர்களையோ நாம் கண்டு கொள்ளாமலோ கருத்தில் கொள்ளா மலோ விட்டு விடுவது கவலைக்குரியது. அவர்களை மீண்டும் ஒரு முறை …

யார் மனதில் யார் இருப்பார்..! Read More

காதலினால் அல்ல

புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வ தாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரிய வில்லை. நேற்றுத்தான் போலிருக்கிறது. நீ ஜேர்மனிக்கு வந்தது. …

காதலினால் அல்ல Read More

காதல் ஒரு போர் போன்றது

அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன். நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப் பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன சொந்தம்? அவனோடு எனக்கென்ன …

காதல் ஒரு போர் போன்றது Read More

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?

இவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது. சின்னவயதில் …

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்? Read More

தடம்பதித்தவர்கள்

எமது வாழ்வில் நல்லவிதமாகவோ அன்றில் கெட்டவிதமாகவோ மனதில் தடம்பதித்துப் போனவர் கள் பலர் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடியோ அன்றில் எப்போதாவதோ எமது நினைவுக்குள் வந்து முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் இவனும் ஒருவன்.      இவன் பற்றிய …

தடம்பதித்தவர்கள் Read More

இரயில் பயணங்களில்…

அப்போது எனக்கு 21வயது நிரம்பி யிருந்தது. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவனிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும்படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது …

இரயில் பயணங்களில்… Read More

அவன்

அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களை யும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள். ‘பெப்பே‘ …

அவன் Read More

யார் மனதில் யார் இருப்பார்..? (நூல்)

வாழ்வில் யார் யாரை எந்தெந்தப் பொழுதுகளில் சந்திக்கப் போகிறோம் என்பதையோ, அவர்களில் யார் யார் எமக்குப் பிடித்தமானவர்களாகி விடப் போகிறார்கள் என்பதையோ எம்மில் யாருமே முற்கூட்டியே அறிந்து வைத்திருப்பதில்லை. ஏன், எதற்கு, எப்படி என்று தெரியாமலே நாம் சந்திப்பவர்களில் சிலர் மட்டும் எம் நெஞ்சங்களில் பிரத்தியேகமான…

யார் மனதில் யார் இருப்பார்..? (நூல்) Read More