home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 13 guests online
manaosai.com
அலாவுதீனும் அற்புத அனுபவமும் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 26 January 2020 09:30
Aladdin, Tarzan, Tanz der Vampire, Koenig der Loewe போன்ற இசை நடன நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சியில்  வரும் போதெல்லாம் ஒருதடவை போய்ப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். நீண்ட காலங்களாக  என்னுள் அந்த விருப்பம் இருந்தும்  ஏனோ முடியவில்லை. ஒன்று நுழைவுச் சீட்டின் விலை அதிகம் என்பதால் இருக்கலாம் இல்லை அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு 90 கிலோ மீற்றர்கள் பயணிக்க வேண்டும்  என்பதாகவும் இருந்திருக்கலாம்.  இதை எல்லாம் தாண்டி இப்பொழுது அது நிறைவேறி இருக்கிறது.

நிகழ்ச்சி முடிய இரவு 11 மணி ஆகிவிடும். குளிர்காலமாதலால் வீதிகளில்  பனி படர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வர ஒரு நாளுக்காக ஒரு ஹொட்டலில் தங்கி விட முடிவு செய்தேன். நுழைவுச் சீட்டுக்கு மட்டும் 142 யூரோக்கள்.  ஆனாலும் இவ்வளவு பணத்தை, நேரத்தை செலவழித்து நிகழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது பெறுமதியாக இருக்குமா என்றொரு அச்சம் கடைசிவரை என்னுள் இருந்தது. தனியாகப் போய்ப் பாரப்பதில் ஏதும் இருக்கப் போவதில்லை. மனைவியை அழைத்துப் போகும் போது செலவு இரட்டிப்பு.  ஆனாலும் இறுதி முடிவாக மனது சொன்னது ‘காசைப் பார்க்காதே, நிகழ்ச்சியைப் போய்ப் பார்’ என்று.
Last Updated on Sunday, 26 January 2020 09:35
Read more...
 
நியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by ஆழ்வாப்பிள்ளை   
Wednesday, 02 January 2019 22:19
Ahilan Karunaharanநியூசிலாந்து நாட்டின் இந்த வருடத்திற்கான சிறந்த நாடக எழுத்தாளருக்கான The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு கிடைத்திருக்கிறது.

யார் இந்த அகிலன் கருணாகரன்? The Bruce Mason விருது என்பது என்ன? என்ற கேள்விகள் உங்களில் யாருக்காவது இருக்கலாம். அதனால் முதலில் The Bruce Mason விருதைப் பற்றிச் சொல்லி விடுகிறேன். பிறகு அகிலன் கருணாகரனது விடயத்துக்கு வருகிறேன்.

1983 ஆம் ஆண்டு முதல் The Bruce Mason விருதானது ஒரு சிறந்த நாடக ஆசிரியரின் திறமைக்கான அங்கீகாரமாக நியூசிலாந்து நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் எழுத்தாளருக்கு 10,000 நியூசிலாந்து டொலர்கள் விருதுடன் சேர்த்து அன்பளிப்பாகவும் வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு எழுத்தாளரை ஊக்குவிப்பதற்கும் அவரது முயற்சிகளின் மேலதிக தேவைகளுக்காகவும் இந்தப் பணம் அவருக்கு உதவலாம் என்ற அடிப்படையிலேயே இந்தப் பணப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரையில் இந்த விருதானது நியூசிலாந்து நாட்டின் பிரபலமான எழுத்தாளர்களான Hone Kouka, Briar Grace-Smith, Jo Randerson, Victor Rodger, Arthur Meek, Sam Brooks and Mīria George ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் வரிசையில் 2018இல் இப்பொழுது அகிலன் கருணாகரனும் இணைந்திருக்கிறார்.

பொதுவாகவே ஈழத்துக் கலைஞர்களை நாங்கள் கண்டு கொள்வதில்லை. அதே நேரம் அவர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் அந்தந்த மொழிகளில் தங்கள் கலைகளை வெளிப்படுத்துகின்ற பொழுது அவர்கள் எங்களிடம் இருந்து அந்நியப்பட்டும் போய் விடுகிறார்கள். அகிலனது நிலையும் இதில் அடக்கம்.
Last Updated on Thursday, 03 January 2019 20:47
Read more...
 
காலத்தால் கரைந்தவை PDF Print E-mail
Literatur - கட்டுரைகள்
Written by மாதவி   
Monday, 31 December 2018 06:25
நேற்று பக்குவமாய் எடுத்து நாளைக்கும் தேவை எனச் சேர்த்து வைத்த எத்தனையோ பொருட்கள் இன்று பயனற்றுப் போயின. இன்றும் நாம் நாளைக்கு எனச் சேர்க்கும் பொருட்கள் என்னவாகுமோ என்ற ஒரு ஏக்கம் முன்பு சேர்த்து பயனற்று இருப்பதைப் பார்க்கும்போது ஏற்படுகின்றது.

வீட்டின் மூலைமுடுக்கு எல்லாம் புத்தகங்கள், பத்திரிகைத் துண்டுகள் அதில் எத்தனையோ எத்தனையோ ஆரோக்கியமான கட்டுரைகள் படங்கள். இவை அனைத்தையும் நாளைய சந்ததிக்கு ஒப்படைத்து விட்டுப் போகலாம் என்றால்… அவர்கள் அதனை வாசித்துப் புரிந்துகொள்ளும் நிலையிலும் இல்லை. அவரவர்களுக்குத்தான் அவரவர்கள் சேர்க்கும் பொருட்களின் பெறுமதி தெரியும். இப்போ நாம் சேர்த்தவற்றில் பல Google க்குள் சென்று தேவையானவற்றை எடுக்க முடிகிறது. கட்டுக்கட்டாக இருக்கும் காகிதங்களுக்குள் புரட்டிப்புரட்டி தேடுவதை விட, இது இலகுவானதுதான். இருந்தாலும் நாம் சேரத்தது எல்லாம் அங்கு இருக்கும் என்பதற்கு இல்லை. நாம் சேர்த்தவை ஒரு புறமிருக்க நாம் அன்றாடம் பாவித்த பொருட்களும் பாவனை இழந்து நிற்கின்றன.
Last Updated on Wednesday, 02 January 2019 22:31
Read more...
 
விண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே!! PDF Print E-mail
Eelam - Heroes
Written by குமணன் முருகேசன்   
Friday, 23 November 2018 14:57
Morris01.05.1989 இதே நாள், இதற்கு முதல் நாளில் பருத்தி மண் தன் குதூகலத்தை இழந்து கொண்டது, யாரும் ஏதிர்பார்க்கவும் இல்லை, எனக்கோ வயது பத்து. சப்பாத்தி மணம் எங்களது ஒழுங்கையெல்லாம் மணந்தது. எங்கள் வீட்டு நாய்க்கோ அந்த மணம் பிடிக்காது. ஆனால் யார் வந்தார்கள் என்று சிறு ஏக்கம். பழகியவர்கள்தான் அங்கும் இங்குமாகத் திரிந்தார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல சப்பாத்தியின் வேவுகள். சறம் கட்டியவங்களைக் காட்டிக் கொடுக்கத் திரிந்த கூட்டங்கள்.

ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டில் சைவம். எனது மூத்த அண்ணா  "பின்னேரம் ஜந்து மணியளவில் பத்து பார்சல் சாப்பாடு வேணும்" என்றார். அம்மாவும் "ஓகே,  எல்லாம் எங்கள் பிள்ளைகள்தானே" என்று கருவாடும் வெந்தயமும் போட்டு குழம்பும் வைத்து, கூப்பன் மா பிட்டும் அவித்துக் கொடுத்து விட்டார். 

"அம்மம்மா வீட்ட போறன்" எண்டு சொல்லிப் போன  எனது அண்ணா இரவு முழுவதும் வரவில்லை. அப்பா வேலியால் எட்டி எட்டிப் பார்த்து "மூத்தவனை இன்னும் காணேல்லை" எண்டு அம்மாவிடம் புறுபுறுத்தார்.

இந்த நாள் பின்னேரம், நானும் தம்பியும் ஆத்தியடி ஒழுங்கையில் கிறிக்கற் விளையாடிக் கொண்டு இருந்தோம். தாங்கள் நாளை சாகப்போறோம் என்று தெரிந்தோ தெரியவில்லை. எங்கள் கூட அவர்கள் விளையாடினார்கள். எங்களுக்கு அவர்களைக் கண்டாலே சந்தோசம்தான்.
Last Updated on Sunday, 25 November 2018 09:48
Read more...
 
தலைவருடன் சில மணிப் பொழுதுகள் PDF Print E-mail
Literatur - பத்திகள்
Written by சந்திரவதனா   
Tuesday, 26 November 2013 10:31
நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப  இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.

´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளில்  இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.
Last Updated on Friday, 23 November 2018 14:18
Read more...
 
Die offene Wunde NSU PDF Print E-mail
Literatur - புத்தகங்கள்
Written by Kerstin Vlcek   
Friday, 14 September 2018 20:55
Schwäbisch Hall / Kerstin Vlcek 11.08.2018

„Ende der Aufklärung – Die offene Wunde NSU“: Haller-Tagblatt-Redakteur Thumilan Selvakumaran ist Mitherausgeber des Buches über den NSU. Viele Fragen sind bis heute offen.

War der Mord an der Polizisten Michèle Kiesewetter in Heilbronn Zufall oder geplant? Besteht der Kern des Nationalsozialistischen Untergrunds (NSU) tatsächlich nur aus Beate Zschäpe, Uwe Mundlos und Uwe Böhnhardt? Warum  hat der Verfassungsschutz so lange nichts vom NSU mitbekommen? Diese und noch viele weitere Fragen werden im Buch „Ende der Aufklärung – Die offene Wunde NSU“ aufgeworfen, auseinandergedröselt und versucht zu klären.

Mitherausgeber Thumilan Selvakumaran, Redakteur des Haller Tagblatts, hat mit weiteren Journalisten und Wissenschaftlern in einem rund 330 Seiten umfassenden Buch versucht, dem Leser die Komplexität des NSU-Gespinstes näherzubringen.

Das haben die 13 Autoren geschafft, auch für einen Laien in der NSU-Thematik. Dass sie lange gegraben und recherchiert haben, ist in jedem der Kapitel herauszulesen. Interviews mit Anwälten, wie jener von der Mutter von Michèle Kiesewetter, und Auszüge aus Plädoyers der Anwälte der NSU-Opfer, geben einen tieferen Einblick in das schwer zu fassende Thema
Last Updated on Tuesday, 16 October 2018 15:57
Read more...
 
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவரை யார் அடித்தாரோ… PDF Print E-mail
Eelam - Heroes
Written by சிவா தியாகராஜா   
Thursday, 26 July 2018 09:01
மாவீரன் லெப்டினன்ட் வெங்கடேஸ் (சண்முகசுந்தரம் ஜீவகரன்) நினைவாக

படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு. வெங்கடேஸ், எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன்.

அவன் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் „பசிக்குதணை. கெதியாச் சமையுங்கோணை“ என்று உரிமையோடு என்னிடம் சொல்லுவான். சமைத்ததும் சாப்பிடுவான். நான் அவனுக்காகவும் அவன் போன்ற மற்றைய போராளிப் பிள்ளைகளுக்காகவும் கடலை, பருப்பு, முறுக்கு... என்று எல்லாம் சுட்டும், பொரித்தும் வைத்திருப்பேன். அவன் வரும் போதெல்லாம் அவைகளை மிகவும் விரும்பி ருசித்துச் சாப்பிடுவான். தன் வீடு போலவே என் வீட்டில் நடந்து கொள்வான்.

எனது மூக்குக் கண்ணாடியை நான் கழற்றி வைத்தால் போதும், அதை எடுத்துப் போட்டுக் கொண்டு அயர்ண் பண்ணி வைத்திருக்கும் சேர்ட் களில், காசைப் பொக்கற்றினுள் வைத்தால் வெளியில் தெரியக் கூடிய வகையிலான ஏதாவதொரு மெல்லிய சேர்ட்டையும் தெரிவு செய்து எடுத்துப் போட்டுக் கொண்டு, என்னிடம் தாள் காசு தரும்படி கேட்டு வாங்கி அதைப் பொக்கற்றுக்குள் வைத்து விட்டு மொறிஸின் இளையக்காவிடம் „இளையக்கா, இப்ப என்னைப் பார்க்க அறிவாளி மாதிரி இருக்குதோ?“ என்று கேட்பான்.

அனேகமான சமயங்களில்
தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை யார் அடித்தாரோ…

என்ற பாடல் கசற்றைப் போட்டு விட்டு, றேடியோவுக்கு முன்னால் அமர்ந்து, மேசையில் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு, பாடலைக் கேட்ட படி அழுது கொண்டிருப்பான்.
Last Updated on Friday, 14 September 2018 22:06
Read more...
 
அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து PDF Print E-mail
Home - manaosai
Written by ஆழ்வாப்பிள்ளை   
Sunday, 09 March 2014 23:55

எழுத்தின் வலிமை மீண்டும் ஒரு தடவை நிரூபணமாகி இருக்கிறது. யேர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான திரைமறைவு இயக்கங்களின் செயற்பாடுகளைப் பற்றிய Geheimsache NSU என்ற புத்தகம் கடந்த ஆண்டு மே மாதம் யேர்மனியில் வெளிவந்திருந்தது. பத்து எழுத்தாளர்களுள் ஒருவராக துமிலனும் அந்தப் புத்தகத்தில் எழுதி இருந்தார். தான் வாழும் Baden-Wuerttemberg மாநிலத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பெண் பொலிஸாரின் (Michele Kiesewetter) கொலையையும், மற்றும் தான் வாழும் நகரத்தில் இருந்த கூ-குளுக்ஸ்-கிளான் (Ku-Klux-Klan) திரைமறைவு இயக்கத்தின் செயற்பாடுகளையும் அவர் தனது எழுத்தில் அந்தப் புத்தகத்தில் வெளிக் கொணர்ந்திருந்தார். புத்தகம் வெளிவந்த சில நாட்களிலேயே அதன் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்து விட்டன. அதன் வெளியீட்டாளர்கள் அந்தப் புத்தகத்தை மீண்டும் மறுபிரசுரம் செய்திருந்தார்கள். ஒரு பொலிஸின் கொலையை திட்டமிட்டே புலனாய்வுத்துறை திசை திருப்பி விசாரணைகளை மேற்கொண்டதா? சாட்சியங்கள் மறைக்கப் பட்டனவா? சாட்சியங்களை வேண்டும் என்றே அழித்தார்களா? கொலையாளிகள் இன்னும் தண்டணை பெறாமல் உலாவி வருகின்றார்களா? என பலவித கேள்விகளையும், காவல்துறையின் மேல் விமர்சனங்களையும் அந்த புத்தகம் ஏற்படுத்தி இருந்தது. Read more

Last Updated on Sunday, 03 December 2017 10:29
 
மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் PDF Print E-mail
Home - manaosai
Written by ஆதவன்   
Sunday, 09 March 2014 23:06
பொங்குதமிழ் இணையம் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே நான் எழுதியதில்லை. ஆயின், மூனா பற்றிய இக்குறிப்பிற்குக் காரணமென்ன? பொங்குதமிழ் தனது முதற்காலடியை எடுத்துவைத்த 2010 பொங்கல் நாளிலிருந்து, இன்றுவரையான இந்த 5 வருடங்களில் 500 கருத்துப்படங்கள் என்ற இலக்கை தாண்டியுள்ளார் ஓவியர் மூனா. பொங்குதமிழ் தனது 6 வது காலடியை எடுத்துவைக்கும் இந்நேரத்தில் இந்த இலக்கை அவர் அடைவது குறித்து பெருநிறைவு அடைகிறோம். 500 கருத்துப்படங்கள் என்பதை வெறும் எண்ணிக்கை சார்ந்த சாதனையாக நாம் பார்க்கவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான குழப்பங்கள் நிறைந்த ஒரு காலத்தில், ஈழ அரசியல் குறித்த கருத்துருவாக்க முயற்சிக்கு மூனாவின் ஓவியங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதை மறுக்கமுடியாது. அவரின் ஓவியங்கள் தனித்துவமானவை. அவை பேசும் மொழியும் சொல்லும் சேதியும் எளிமையானது. வாசகனை இலகுவாக சென்றடையக்கூடியது. Read more
Last Updated on Sunday, 03 December 2017 10:28
 
எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல் PDF Print E-mail
Home - manaosai
Written by காண்டீபன்   
Sunday, 09 March 2014 23:15
Thumilan Selvakumaranதுமிலன் ஈழத்தில் இருந்து 1986இல் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். கணினித்துறையில் தனது தொழில்சார் கல்வியை முடித்திருந்தாலும், எழுதுவதில் உள்ள ஆர்வத்தால் பத்திரிகைத் துறைக்குள் நுளைந்து நிருபராக, புகைப்படக் கலைஞராக ஆரம்பித்து இன்று ஒரு பத்திரிகையின் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் பரிணமித்துக் கொண்டிருப்பவர். இவர் ஒன்பது எழுத்தாளர்களுடன் இணைந்து யேர்மனிய மொழியில் எழுதிய Geheimsache NSU என்ற புத்தகம் யேர்மனியில் மே 26 அன்று வெளியாகி உள்ளது. NSU என்ற திரைமறைவு அமைப்பின் கொலைகள் மற்றும் செயற்பாடுகளை இந்தப் புத்தகம் விரிவாக ஆராய்ந்திருக்கிறது. இப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியான இரு தினங்களிலேயே விற்பனையாகி விட்டதால், உடனடியாக மீள்பதிவு செய்யப்பட்டு உள்ளது. யேர்மனியப் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் இப் புத்தகம் பற்றிப் பேசப்படுகிறது. எழுத்தாளர்களின் நேர் காணல்களும் இடம் பெறுகின்றன. Read more
Last Updated on Sunday, 03 December 2017 10:26
 
கப்டன் மயூரன் PDF Print E-mail
Home - manaosai
Written by சிவா தியாகராஜா   
Sunday, 09 March 2014 23:34
அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு. எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும் அத்தான் கணேசுடனும் பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். அன்று மே 6ம் திகதி 1993ம் ஆண்டு.எனது இளைய மகன் சபா (கப்டன்.மயூரன்) நாம் எதிர்பாராத வேளையில் நீண்ட பொழுதுகளின் பின் எங்கள் வீட்டில் வந்து இறங்கினான். எனது இன்னொரு மகன் - கப்டன் மொறிஸ் அந்த நேரம் மாவீரனாகி விட்டான். எனது மூத்த இரு பெண்பிள்ளைகளும் அதாவது அவனது மூத்தக்கா, இளையக்கா இருவரும் வெளிநாடு சென்று விட்டார்கள். அவனது சின்னக்கா பிரபாவும், பிரபாவின் கணவர் கணேசும், தங்கை பாமாவும்தான் வீட்டில் என்னுடன் இருந்தார்கள். பிரபாவுடனும், அத்தான் கணேசுடனும், பாமாவுடனும் அவன் ஒரே லூட்டிதான். வயிற்றில் அல்சர் இருப்பதால்தான் வைத்தியம் செய்வதற்காக ஒன்றரை மாத லீவில் வந்திருப்பதாகச் சொன்னான். வைத்தியசாலைக்குச் சென்று ஏதோ மருந்துகள் எடுத்து வருவான். ஆனால் சாப்பாட்டில் எந்த விதக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க மாட்டான். அவன் வந்திருக்கிறான் என்று அவனது பாடசாலைத் தோழர்களும், போராளித் தோழர்களும் மாறி மாறி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். Read more
Last Updated on Friday, 23 November 2018 14:32
 
கப்டன் மொறிஸ் PDF Print E-mail
Home - manaosai
Written by திலீபன்   
Sunday, 09 March 2014 23:46
நான் போர்முனையில் குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்! மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன்! ஆனால் உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே" என்றான். அவன்தான் மொறிஸ். 1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத் துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான். நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான்.பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான். பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு. முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு. ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள். Read more
Last Updated on Friday, 23 November 2018 14:29