இளங்கன்று

கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும் குளிர் வெளிக்குள் கவின் நுழைந்து விட்டான். சந்தியாவுக்கு மனம் விறைத்தது. சுந்தரேசனோ எந்தவித அலட்டலுமின்றிப் படுக்கையறையுள் புகுந்து படுக்கையில் சாய்ந்து கொண்டான். கவின் அமெரிக்காவுக்குப் போக வேண்டுமாம். அதுதான்…

இளங்கன்று Read More

கனவான இனிமைகள்

இன்றைய சுமதியின் கனவு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. வழமையான கனவுகள் போல கட்டிலில் இருந்து தொப்பென்று விழுவதாயோ, திடுக்கிட்டு விழித்து அழுவதாயோ இருக்கவில்லை. நேற்றிரவு படுக்கையிலேயே சுமதிக்கும் அவள் கணவனுக்கும் காரசாரமான சண்டை வந்து விட்டது. சண்டை என்னவோ வழமையாக வரும், …

கனவான இனிமைகள் Read More

வசந்தம் காணா வாலிபங்கள்

அதிகாலையில் ஒலித்த தொலைபேசி அழைப்பில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நான்கு மணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று எரிச்சலுடன் போர்வையை இழுத்து எறிந்து விட்டு தொலைபேசியை நோக்கி ஓடினான். …

வசந்தம் காணா வாலிபங்கள் Read More

ஏன்தான் பெண்ணாய்..?

எனக்கு ஒண்டுமே பிடிக்கேல்லை. எல்லாரிலையும் கோபம் கோபமா வருது. எதுக்கெடுத்தாலும் “பொம்பிளைப் பிள்ளை நீ” எண்டு கொண்டு..! ஏன்தான் இப்பிடிப் பொம்பிளைப் பிள்ளையாப் பிறந்தனோ! ஞாயிற்றுக்கிழமை எண்டால் எல்லாரும் எவ்வளவு சந்தோசப் படுவினம். எனக்கு மட்டும் ஞாயிறுகள் எல்லாம் ஏன்தான் வருதோ …

ஏன்தான் பெண்ணாய்..? Read More

சங்கிலித்துண்டங்கள்

அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும் அமர்ந்திருந்து இளஞ்சோடிகள் காதல் லீலைகள் புரிந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தைக் கடற்கரையின் அந்த மகிழ்வலைகளில் என் மனம் குதூகலிக்க மறுத்தது. இந்து …

சங்கிலித்துண்டங்கள் Read More

விலங்குடைப்போம்

சங்கவி மெலிதாக திரைச்சீலையை விலக்கிப் பார்த்தாள். ஓ… கண்ணுக்குத் தெரிந்த தூரம் வரை நிலம், மரங்கள், வீட்டுக் கூரைகள்… என்று எல்லாவற்றையும் வெண்பஞ்சு போன்ற வெள்ளைப் பனி போர்த்தியிருந்தது. ஆர்ப்பரிக்கும் கடல் அலையின் மெலிதான ஓசை, ஆலும் அரசுமாய் குடை விரித்திருக்க, …

விலங்குடைப்போம் Read More

அம்மாவுக்குத் தெரிந்தது

எனக்கு அழுதிடலாம் போல இருந்தது. நான் தேடித்தேடி தரவிறக்கம் செய்து வைத்த பாட்டுக்கள் எல்லாமே அழிந்து போய் விட்டன. எனது வகுப்பிலும் சரி, எனது நண்பர்களிடையேயும் சரி என்னிடந்தான் நிறையப் பாடல்கள் இருந்தன. இந்தப் பாடல்களுக்காகவே எனது நண்பர்கள் எனது வீட்டுக்கு …

அம்மாவுக்குத் தெரிந்தது Read More

என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?

எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது, “என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ” எண்டு. என்னெண்டு முடியிறது? காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப்படுத்தி, …

என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ? Read More

எதனால்?

அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது. எனது எதிர்பார்ப்பு மாமாவின் பிள்iளைகளுடனான சந்திப்பும், அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல் …

எதனால்? Read More

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும், எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாது எத்தனையோ பேருடன் வாய் குளறி… தடுமாறி இருக்கிறேன். அப்படியான சமயங்களில் “எழுத்தின் …

மேடைப்பேச்சு Read More

விழிப்பு

இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து இந்து குமுறினாள். “நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ?” “இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கிறேல்லை. பெண்டாட்டி எண்டால் வீட்டுக்கு வாற கணவனை அன்பா, சிரிச்ச முகத்தோடை வரவேற்கோணும்” சினந்தான் …

விழிப்பு Read More

உபதேசம்

நேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டும். மனசு அவாப்பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாம், என்று நினைத்துப் பொறுமை காத்தேன். என்னை விடப் பத்து வருடங்கள் …

உபதேசம் Read More