என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ?

எனக்கு வாற கோவத்துக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. நான் பாத்ரூமுக்குள்ளை போய் தலையிலை சீப்பை வைக்குது வைக்க முன்னமே திரும்பவும் இந்த மனுசன் கத்துது, “என்னப்பா இன்னும் வெளிக்கிட்டு முடியேல்லையோ” எண்டு. என்னெண்டு முடியிறது? காலைமை எழும்பி, வீட்டை ஒரு நிலைப்படுத்தி, …

என்னப்பா இன்னும் வெளிக்கிடேல்லையோ? Read More

எதனால்?

அப்பா மட்டும் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக விறாந்தையில் நடந்த படி புறுபுறுத்துக் கொண்டிருந்தார். அவர் புறுபுறுப்பில் நியாயமிருந்தது. எனது எதிர்பார்ப்பு மாமாவின் பிள்iளைகளுடனான சந்திப்பும், அதன் பின் தொடரப் போகும் பம்பலைப் பற்றியுமென்றால், அப்பாவின் கோபமோ தான் சொல்லச் சொல்லக் கேளாமல் …

எதனால்? Read More

மேடைப்பேச்சு

அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும், எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும், பேச்சுக்கும் சம்பந்தம் இல்லாது எத்தனையோ பேருடன் வாய் குளறி… தடுமாறி இருக்கிறேன். அப்படியான சமயங்களில் “எழுத்தின் …

மேடைப்பேச்சு Read More

விழிப்பு

இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து இந்து குமுறினாள். “நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ?” “இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கிறேல்லை. பெண்டாட்டி எண்டால் வீட்டுக்கு வாற கணவனை அன்பா, சிரிச்ச முகத்தோடை வரவேற்கோணும்” சினந்தான் …

விழிப்பு Read More

உபதேசம்

நேற்று மாலதி நாட்டிலிருந்து திரும்பியிருப்பாள். அவளிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்க வேண்டும். மனசு அவாப்பட்டது. நேற்றே தொலைபேசியில் அழைத்திருக்கலாம். பயண அலுப்புகளின் மத்தியில் என் தொல்லை வேறு அவளுக்கு வேண்டாம், என்று நினைத்துப் பொறுமை காத்தேன். என்னை விடப் பத்து வருடங்கள் …

உபதேசம் Read More

கல்லட்டியல்

துகிலுரித்த மரங்களின் நிர்வாண அழகை ரசித்தது போதுமென்று நினைத்ததோ இயற்கை, மரங்களுக்கெல்லாம் பனிப்போர்வை போர்த்திக் கொண்டிருந்தது. நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்குமாங்கே பொசிவது போல், இயற்கையின் இந்தச் சொரிவில் வீடுகளின் ஓடுகளும், வீதிகளும் கூடப் பனிப் போர்வைக்குள் தம்மை …

கல்லட்டியல் Read More

தீர்க்கதரிசனம்

பன்னிரண்டாவது மாடியின் பல்கணியில் நின்று பார்த்த போது பகலை விட மின்விளக்குகள் கீழேயும், நட்சத்திரங்கள் மேலேயுமாய் மின்னிக் கொண்டிருக்கும் இரவு அழகாயிருந்தது. பகல் பார்த்த போது கனடா ஒன்ராறியோவின் எக்லிங்ரன் அவெனியூவின் நீண்டு விரிந்து தெரியும் விளையாட்டு மைதானம் ஆங்காங்கு நடைபெற்றுக் …

தீர்க்கதரிசனம் Read More

அந்த மௌன நிமிடங்களில்…

நூற்றுக் கணக்கான கிலோ மீற்றர்களைக் கடந்து வந்த களைப்பையும் மீறிய சோகம் மாவீரர் குடும்பத்தினருக்கென மண்டபத்தின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களின் முகங்களில் அப்பியிருந்தது.
தமிழர்களின் பழங்காலக் கோட்டை வடிவில் அமைக்கப் பட்டிருந்த மேடையும், மேடைக்கு இடது புறமாக…

அந்த மௌன நிமிடங்களில்… Read More

அக்கரைப்பச்சைகள்

என் சின்னவன் எனது மடிக்குள் கிடந்து பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவள் வந்தாள். எப்போதும் அவள் இப்படித்தான் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுமுறையில் வரும் போதெல்லாம் என் வீட்டை எட்டிப் பாராது தன் வீட்டுக்குப் போக மாட்டாள். சொந்தம் என்பதையும் விட …

அக்கரைப்பச்சைகள் Read More

மூனா – நேர்காணல்

பொங்குதமிழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஒரு கருத்துப்பட ஓவியராக தொடர்ச்சியாக இயங்கி வருபவர் செல்வகுமாரன். சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட இவர் ஓவியர் மாற்கு அவர்களின் மாணவர். ஓவியத்திற்கு அப்பால் நாடகம், கவிதை, கட்டுரை என பல்தளங்களில் இயங்கும் ஒரு முழுமையான படைப்பாளி…

மூனா – நேர்காணல் Read More

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம்

பொங்குதமிழ் இணையம் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்யும் இந்நேரத்தில், பொங்குதமிழில் வெளியாகும் தனித்துவமான கருத்துப்பட ஓவியங்கள் குறித்தும், ஓவியர் மூனா குறித்தும் சில வார்த்தைகள் பேச வேண்டும். பொங்குதமிழில் பங்களித்துவரும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து தனிப்பட எதுவுமே…

மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் Read More

சர்வதேசப் பெண்கள் தினம்

இன்று சர்வதேசப் பெண்கள் தினம். ஆணாதிக்க அடிமைவிலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் அர்த்தம் நிறைந்த நாள். ஒடுக்கப் பட்டும் மனம் நெரிக்கப்பட்டும் இருந்த பெண்கள் தம் வலிமையை உணர்ந்து விலங்கை ஒடிக்கத் துணிந்து ஓங்கிக் குரல் கொடுத்த நாள். 1857ம் ஆண்டில் போரின் காரணமாக தொழிலாளர்கள் பற்றாக்குறை…

சர்வதேசப் பெண்கள் தினம் Read More