பாதை எங்கே?

அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர்தான். அந்தக் …

பாதை எங்கே? Read More

பயணம்

இன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு முடிவான பொழுதே எனக்குள் மெல்லிய சந்தோச அலை அடிக்கத் தொடங்கி விட்டது. எனது கணவர் நிகழ்ச்சி நடை பெறும் மண்டபத்துக்கு வேளைக்கே போய் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதாம். அதனால் அதிகாலையிலேயே தான் காரில் …

பயணம் Read More

வேஷங்கள்

காலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது …

வேஷங்கள் Read More

கணேஸ்மாமா

பிச்சிப்பூ மரத்திலிருந்து ஒரு காகம் வாய் ஓயாது கத்திக் கொண்டே இருந்தது. “அப்பாச்சி.., இது அண்டங்காகமோ.., அரிசிக்காகமோ..?” தவிடு பறக்க அரிசி பிடைத்துக் கொண்டிருந்த அப்பாச்சியைப் பார்த்துக் கேட்டேன். பிடைப்பதை நிறுக்திய அப்பாச்சி காகத்தைக் கூர்ந்து நோக்கி மீண்டும் சுளகு அரிசிக்குள் …

கணேஸ்மாமா Read More

நாகரிகம்

“என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?” “ஓம், நான் போடுறேல்லை.” “என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலியில்லாட்டில் என்ன நினைப்பினம்! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே!” அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி …

நாகரிகம் Read More

சொல்லிச் சென்றவள்

பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது. விமானத்திலிருந்து குதிக்க முடியுமா? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்! …

சொல்லிச் சென்றவள் Read More

குண்டுமணி மாலை

அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை …

குண்டுமணி மாலை Read More

பொட்டு கிளாஸ்

டொமினிக் ஜீவா அவர்களின் ´எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்´ என்ற புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து மனதின் அடிநாதத்திலிருந்து ஏதேதோ நினைவுகள் எழுந்து வந்து அலை மோதிக் கொண்டிருக்கின்றன. கட்டியக்காரனாக நின்று அவர் எழுதிய வரிகளைத் தாண்டி என்னால் மேலே செல்ல …

பொட்டு கிளாஸ் Read More

நத்தார்ச் சந்தை

பாதாம்பருப்பு சீனியில் முறுகிய வாசம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. குளிர் மூக்குநுனியையும், காதுமடல்களையும் கொஞ்சம் அதிகமாகவே சீண்டி விளையாடியது. அங்கு நின்ற அனேகமான எல்லோரும் சுவெபிசுஹால் நகரின் பிரசித்தமான மைக்கல் தேவாலயத்தின் படம் வரைந்த குடிகோப்பையை கைகளில் கொண்டு திரிந்தார்கள். சுமதியின் …

நத்தார்ச் சந்தை Read More

மூன்று சுற்று

நான் தொங்கித் தொங்கி கயிறடித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுதொன்றில் அம்மா கூப்பிட்டுச் சொன்னா „குக்கருக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது, ஒடிப்போய் வாங்கிக் கொண்டு வா“ என்று. அப்போது எனக்கு பத்து வயது இருக்கலாம். அல்லது அதை விடக் குறைவாகவும் இருக்கலாம். நினைவு படுத்திக் …

மூன்று சுற்று Read More

முத்தம்மா

முத்தம்மா கை மாற்றிக் கை மாற்றி உலக்கையைத் தூக்கித் தூக்கிப் போட்டு அரிசியை இடித்துக் கொண்டிருந்தாள். உலக்கை ஒவ்வொரு தரமும், ஒரு சீரான வேகத்துடன் உரலுக்குள் உள்ள அரிசிக்குள் வீழ்ந்து புதையும் போது எழும் சத்தம் ஒரு தாளம் போல ஒலித்துக் …

முத்தம்மா Read More