பதியப்படாத பதிவுகள்

சோவென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன. சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து…

பதியப்படாத பதிவுகள் Read More

சுமை தாளாத சோகங்கள்

வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப்…

சுமை தாளாத சோகங்கள் Read More

மரணங்கள் முடிவல்ல

சில மணி நேரத்திற்கு முன்பு, என்றைக்கும் இல்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த செல்வமலர், இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடுவீதிக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள். தெரு விளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்த விதமான…

மரணங்கள் முடிவல்ல Read More

பெண் அடங்க வேண்டுமா?

அடங்குதல் என்பது அன்பு, பாசம், நட்பு, மரியாதை இவைகளுக்குள் அடங்கும் ஒரு விடயம். அதை ஆண் – பெண் என்ற இரு பால்களுக்கிடையில் அடக்க நினைப்பது அபத்தம். அன்பின் முன்னோ பாசத்தின் முன்னோ அடங்கு என்றோ அல்லது வளைந்து கொடு என்றோ யாருமே யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அன்பின் நெகிழ்ச்சியில் பாசத்தின் இறுக்கத்தில் அது தானே…

பெண் அடங்க வேண்டுமா? Read More

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்

புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர் காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது. புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது…

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் Read More

புலம்பெயர் வாழ்வில் திருமணமாகாத தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியற் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப் பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகி விட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் பெண்களின் பல்வேறு வளர்ச்சிப்பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப்படிகளிலும் இந்த உளவியற்பிரச்சனை தொடர்ந்து…

புலம்பெயர் வாழ்வில் திருமணமாகாத தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியற் பிரச்சனைகள் Read More

ஆண்-பெண் நட்பு

இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டமென்று சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இரு விடயங்களால் பெற்றோருடனும் ஒட்டமுடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒருவித மனஉளைச்சலுடன் வாழ்கிறார்கள். இதே நேரம்…

ஆண்-பெண் நட்பு Read More

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா.?

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது எம்நாட்டுப் பெண்களும் அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எம் நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே
இல்லையா? கலாச்சாரம், பண்பாடு…

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா.? Read More

குண்டுமணி மாலை

அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது…

குண்டுமணி மாலை Read More