பாயசம் வைக்க வேணும் பானையிலோ அரிசி இல்லை

எலியார்:

பாயசம் வைக்கவேணும்
பானையிலோ அரிசி இல்லை
முற்றிய நெற்கதிரே
அரிசி கொஞ்சம் தருவாயோ?

நெற்கதிர்:

நானெப்படித் தர முடியும்?
என்னை வளர்க்கும் வயலிடம் போய்க் கேள்

வயலிடம் போன எலியார்:

பாயசம் வைக்கவேணும்
பானையிலோ அரிசியில்லை.
முற்றிய நெற்கதிரே
நெல்லை வளர்த்த வயலே
அரிசி கொஞ்சம் தருவாயா?

வயல்:

நானெப்படித் தர முடியும்?
என்னை ஈரமாக்கி உதவும் நீரைப் போய்க் கேள்

நீரிடம் போன எலியார்:

பாயசம் வைக்க வேணும்
பானையிலோ அரிசியில்லை
முற்றிய நெற்கதிரே
நெல்லைவளர்த்த வயலே
வயலில் பாய்ந்த நீரே
அரிசி கொஞ்சம் தருவாயோ?

நீர்:

நானெப்படித் தரமுடியும்?
என்னை வரம்பு கட்டி இங்கே நீரைப் பாய விட்ட உழவனைப் போய்க் கேள்

உழவனிடம் போன எலியார்:

பாயசம் வைக்க வேணும்
பானையிலோ அரிசியில்லை
முற்றிய நெற்கதிரே
கதிரை வளர்த்த வயலே
வயலை நனைத்த நீரே
நீரைப் பாய்ச்சிய உழவா
அரிசி கொஞ்சம் தருவாயோ?

உழவனும் எலியாருக்கு அரிசி கொடுத்தார்.
எலியார் பாயாசம் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *