கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா.?

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது எம்நாட்டுப் பெண்களும் அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எம் நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே
இல்லையா? கலாச்சாரம், பண்பாடு…

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா.? Read More

குண்டுமணி மாலை

அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது…

குண்டுமணி மாலை Read More

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…

அன்று 1985ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் திகதி. தாயகத்தில் அமைதியாக இருந்த குளங்களிலெல்லாம் கல்லெறியப் பட்டு விட்ட காலம் அது. எங்கள் வீடும் அப்போது கல்லெறியப்பட்ட குளமாய்த் தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் குட்டித் தங்கை பாமாவின் 13 ஆவது பிறந்த நாளை அதாவது ரீன்ஏஜ் இல் காலடி எடுத்து வைக்கும் அவளின் பிறந்தநாளைக் கொண்டாடாமல்…

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி… Read More