கெளதமி காத்திருந்தாள்

போர் தொடங்கிய பின்தான் கெளதமி எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தாள். மாம்பழம் போல ஒருவித மஞ்சள் நிறத்தில் மொழுமொழுவென்றிருந்தாள். அவள் சிரித்தால் முத்துக்களை அடுக்கி வைத்தது போன்ற சீரான அழகிய பற்கள் பளிச்சிடும். நினைத்தவுடன் சிரிக்கவும் தேவைப்படும் போதெல்லாம் கண்களைக் குளமாக்கவும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

கெளதமி காத்திருந்தாள் Read More

நத்தார்ச் சந்தை

பாதாம்பருப்பு சீனியில் முறுகிய வாசம் காற்றில் மிதந்து கொண்டிருந்தது. குளிர் மூக்குநுனியையும், காதுமடல்களையும் கொஞ்சம் அதிகமாகவே சீண்டி விளையாடியது. அங்கு நின்ற அனேகமான எல்லோரும் சுவெபிசுஹால் நகரின் பிரசித்தமான மைக்கல் தேவாலயத்தின் படம் வரைந்த குடிகோப்பையை கைகளில் கொண்டு திரிந்தார்கள். சுமதியின் நினைவுகள்…

நத்தார்ச் சந்தை Read More

முத்தம்மா

முத்தம்மா கை மாற்றிக் கை மாற்றி உலக்கையைத் தூக்கித் தூக்கிப் போட்டு அரிசியை இடித்துக் கொண்டிருந்தாள். உலக்கை ஒவ்வொரு தரமும், ஒரு சீரான வேகத்துடன் உரலுக்குள் உள்ள அரிசிக்குள் வீழ்ந்து புதையும் போது எழும் சத்தம் ஒரு தாளம் போல ஒலித்துக் கொண்டிருக்க, முத்தம்மாவின் மேற்சட்டைக்கும் இடுப்புச்சேலைக்கும் இடையில் சற்றுப் பிதுங்கி மடிந்திருந்த…

முத்தம்மா Read More