புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம்

புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர் காலம் என்று பார்க்கும் போது, எல்லாப் பெண்களின் எதிர்காலமுமே ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்லி விட முடியாது. புலம் பெயர் மண்ணில் வாழ்ந்தாலும் அனேகமாக ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணின் பாதையும் அவளை அண்டியுள்ள அவளது உறவுகளாலேயே தீர்மானிக்கப் படுகிறது…

புலம் பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம் Read More

புலம்பெயர் வாழ்வில் திருமணமாகாத தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியற் பிரச்சனைகள்

உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப் பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகி விட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் பெண்களின் பல்வேறு வளர்ச்சிப்பருவங்களிலும் பல்வேறு வளர்ச்சிப்படிகளிலும் இந்த உளவியற்பிரச்சனை தொடர்ந்து…

புலம்பெயர் வாழ்வில் திருமணமாகாத தமிழ்ப்பெண்கள் எதிர்நோக்கும் உளவியற் பிரச்சனைகள் Read More

ஆண்-பெண் நட்பு

இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டமென்று சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இரு விடயங்களால் பெற்றோருடனும் ஒட்டமுடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒருவித மனஉளைச்சலுடன் வாழ்கிறார்கள். இதே நேரம்…

ஆண்-பெண் நட்பு Read More

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா.?

தமிழர்களின் கலாச்சாரம் பண்பாடு என்று பார்க்கும் போது எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. எப்போதும் கலாச்சாரம் பண்பாடு என்று வரும் போது எம்நாட்டுப் பெண்களும் அவர்களது பொட்டும் தாலியும் உடைகளும்தான் அலசப்படுகின்றன. ஏன் எம் நாட்டு ஆண்களுக்கென்று கலாச்சாரம் பண்பாடு எதுவுமே
இல்லையா? கலாச்சாரம், பண்பாடு…

கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டுந்தானா.? Read More

நாளைய பெண்கள் சுயமாக வாழ…

சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது. 35 வருடங்களாக பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் அமெரிக்கரான டொக்டர். டிக்ரஸ் இன் கண்டுபிடிப்பு களின் படி குரங்கும் சீதனம்…

நாளைய பெண்கள் சுயமாக வாழ… Read More

பாதை எங்கே?

அவளை சோகம் பிடுங்கித் தின்றது. அழவேண்டும் போல இருந்தது. சின்னச் சீரகத்தைப் பலகையில் போட்டு அரைக்கும் போது இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சின்னச் சீரகத்துள் விழுந்தன. அவள் குலுங்கி அழவில்லை. கண்ணீர் தரைதாரையாக ஓடவில்லை. இரண்டே இரண்டு சொட்டுக் கண்ணீர் தான். அந்தக் கண்ணீரில் ஒரு கடலளவு சோகம் நிறைந்திருந்தது…

பாதை எங்கே? Read More

பயணம்

இன்று புகையிரதத்தில்தான் பயணிக்க வேண்டுமென நேற்றிரவு முடிவான பொழுதே எனக்குள் மெல்லிய சந்தோச அலை அடிக்கத் தொடங்கி விட்டது. எனது கணவர் நிகழ்ச்சி நடை பெறும் மண்டபத்துக்கு வேளைக்கே போய் முடிக்க வேண்டிய வேலைகள் இருக்கிறதாம். அதனால் அதிகாலையி லேயே தான் காரில் காரில் போய் விடுவதாயும் என்னை பின்னர்…

பயணம் Read More

வேஷங்கள்

காலைப் பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய் ஜேர்மனி அழகாகத்தான் இருந்தது. சிக்னலுக்காக காரில் காத்துக் கொண்டிருந்த உமாவின் மனது…

வேஷங்கள் Read More

கணேஸ்மாமா

பிச்சிப்பூ மரத்திலிருந்து ஒரு காகம் வாய் ஓயாது கத்திக் கொண்டே இருந்தது. “அப்பாச்சி.. இது அண்டங்காகமோ.., அரிசிக்காகமோ..?” தவிடு பறக்க அரிசி பிடைத்துக் கொண்டிருந்த அப்பாச்சியைப் பார்த்துக் கேட்டேன். பிடைப்பதை நிறுக்திய அப்பாச்சி காகத்தைக் கூர்ந்து நோக்கி மீண்டும் சுளகு அரிசிக்குள் கவனத்தைச் செலுத்தி, அரிசிக்குள் நெல் ஒன்றைக் கண்டு…

கணேஸ்மாமா Read More

நாகரிகம்

என்ன தாலிக்கொடியைப் போடாமல் வந்தனீரே..?” “ஓம், நான் போடுறேல்லை.” “என்ன நீர்..! அவை இதெல்லாம் கவனமாப் பார்ப்பினம். தாலி இல்லாட்டில் என்ன நினைப்பினம்! சீ.. எவ்வளவு மரியாதை இல்லைத் தெரியுமே!” அவள் தனது மொத்தத் தாலிக்கொடியில் கொழுவியிருந்த காசுப் பென்ரனை விரல்களால் அளாவியபடி என்னுடன் அலுத்துக்…

நாகரிகம் Read More

சொல்லிச் சென்றவள்

பிள்ளைகள் மூன்று பேரையும் இழுத்துக் கொண்டு விமானத்திலிருந்து குதித்து விடுவோமா! என்ற எண்ணம் எனக்குள் தோன்றியிருந்தது. வாழ்க்கை ஆசை அப்படியே அற்றுப் போய் தற்கொலை எண்ணம் என்னை ஆக்கிரமித்திருந்தது. விமானத்திலிருந்து குதிக்க முடியுமா? என்ன ஒரு மக்குத் தனமான எண்ணம் என்னுள்!விமானம் ஏதாவதொரு நாட்டில் தரையிறங்கும் போது…

சொல்லிச் சென்றவள் Read More

குண்டுமணி மாலை

அந்த இருளிலும் வடிவாகத் தெரிந்தது. மரங்கள், வீடுகள், லைற்கம்பங்கள் என்று வெளியில் எல்லாமே ஓடிக் கொண்டிருந்தன. இல்லையில்லை, ரெயின் ஓடிக் கொண்டிருந்தது. ரெயினின் அந்தச் சத்தம் கூட இசை போல எனக்குப் பிடித்தது. பயம் என்னை அப்பியிருந்த போதும் அந்தச் சத்தத்தை நான் ரசித்தேன். அதுவே பாடலாக என்னைத் தழுவியது. தாலாட்டியது…

குண்டுமணி மாலை Read More