ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவு

அப்போதெல்லாம் ஈழத்தில் ஆண்பிள்ளைகளை, பெற்றோர்கள் பெருந்தூணாகத்தான் நம்பி இருந்தார்கள். ஆண்பிள்ளை கூடவே வளர்வான், உறுதுணையாக இருப்பான், படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்து குடும்பத்தைத் தாங்குவான், தோள் கொடுப்பான், வீட்டிலுள்ள பெண்பிள்ளைகளைக் கரைசேர்ப்பான்… என்றெல்லாம் அவர்கள் கனவுகள் கண்டார்கள்…

ஒரு இளவயது வாழ்க்கையின் அலைக்கழிவு Read More
Captain Mayuran (Saba), Captain Morris (Parathan), Bhama (1979)

அம்மாவின் கனவுகள்

அம்மாவிடம் போகும் போது பெரும்பாலும் தொலைபேசியில் அழைத்து “சிறிது நேரத்தில் வருகிறேன்“ என்று சொல்லி விட்டுத்தான் போவேன். நான் அங்கு போகும் போது தொலைக்காட்சியில் (தமிழ்) குடும்பச்சண்டை, பழிவாங்கல், ஏமாற்றுதல், அழுகை… என்று ஏதாவது போய்க் கொண்டிருக்கும். மேசையில் ஏதாவதொரு புத்தகம்…

அம்மாவின் கனவுகள் Read More
Station Master M. S. Thiyagrajah

கணவாய்க் கறியும் அப்பாவும்

எனது அப்பா, விடுமுறையில் வீட்டுக்கு வந்து நிற்கும் போதெல்லாம் வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் அம்மாவுடன் இணைந்து விடுவார். அரிசியில் கல்லுப் பொறுக்குவதிலிருந்து கிணற்றடியில் அம்மாவுடன் இருந்து உடுப்புகளுக்குச் சவர்க்காரம் தேய்த்து, உடுப்புகளை அலசிப் பிழிந்து, கொடியில் காய விடுவது வரை வீட்டின் எல்லா வேலைகளிலுமே அவர் கைகளும்…

கணவாய்க் கறியும் அப்பாவும் Read More

அந்த நாட்கள்

பொன்னிலும், பளிங்கிலும் ஜேர்மனி பளபளக்கும் என்ற சிறுவயதிலான மேலைநாடுகளைப் பற்றிய கனவு ஐந்து நாட்களுக்கு முன் மொஸ்கோவில் இருந்து திருப்பி அனுப்பப் பட்ட போது கலைந்து போய் விட்டது. ஏஜென்சியைப் பிழை சொல்லி என்ன பயன். மீண்டுமான முயற்சியில் மீண்டுமாய் பணத்தைக் கொட்டிவிட்டு இன்னொரு ஏஜென்சியை நம்புவதுதான் அப்போதைக்குச்…

அந்த நாட்கள் Read More

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்

இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப் பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த வேறுபாடுகளை உண்டாக்கி தண்டுவடம் மூலம் மூளையின் தலாமஸ் பகுதிக்கு…

ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் Read More

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத் திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின்…

தலைவருடன் சில மணிப் பொழுதுகள் Read More

உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும்

அந்த முறை மாவீரன் சுசீலன் தான் கப்டன் மயூரனை Pajero வாகனத்தில் அவனது சின்னக்கா பிரபாவிடம் கூட்டிக் கொண்டு வந்தான். “பிரபாக்கா, மயூரனுக்கு நல்லாச் சமைச்சுக் குடுங்கோ. நல்ல குளிர்ந்த சாப்பாடுகள் குடுங்கோ“ என்று சொல்லி விட்டுச் சென்றான். போன முறை சுசீலன் தனியாக மயூரனின் கடிததத்துடன் வந்த போது “பிரபாக்கா, மயூரன் சரியான…

உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும் Read More

அந்தத் தொலைபேசி அழைப்பு

அப்போதெல்லாம் இப்போது போல வட்ஸ்அப், வைபர், மெசெஞ்சர்… என்று எதுவுமே இருக்கவில்லை. கைத் தோலைபேசி கூட இல்லை. வீட்டுத் தொலைபேசியில் விரல் விட்டு ஒவ்வொரு எண்ணாகச் சுற்றித்தான் யாருடனாவது தொலைபேச முடியும். யேர்மனி யிலிருந்து ஊரில், ஆத்தியடியில் இருக்கும் அம்மாவுடன் தொலை பேச விரும்பினால் அப்படி …

அந்தத் தொலைபேசி அழைப்பு Read More

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே!

Platform ரைல்ஸ் பெரிய பெரிய சதுரங்களாக, நீளத்துக்கும் பெட்டிகளை அடுக்கி விட்டது போல நீண்டு பரந்து இருந்தன. நான் ஒவ்வொரு பெட்டியாகக் கடந்து கொண்டிருந்தேன். அது 1968ம் ஆண்டின் ஏதோ ஒரு மாதம். அப்போது நாங்கள் பாடசாலை விடுமுறையைக் கழிப்பதற்காக மாகோவுக்கும் குருநாகலுக்கும் இடையில் இருக்கும் மூன்று புகையிரத…

தாய் சொல்லைத் தட்(டினேன்)டாதே! Read More

தேவை ஒரு கண்ணாடி

நான் வடிவோ வடிவில்லையோ என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. நேற்றிரவு நான் எனது படமொன்றை Facebook இல் போட்டு விட்டுப் படுத்து விட்டேன். இன்று காலையில் எழுந்து பார்த்த போது அந்தப் படத்துக்கு முந்நூறுக்கு மேல் லைக்ஸ். நூறுக்கு மேல் கொமென்ற்ஸ். உள் பெட்டியில் ஊருப்பட்ட செய்திகள். ‘வடிவு, நீங்கள் நல்ல வடிவு’…

தேவை ஒரு கண்ணாடி Read More

பதியப்படாத பதிவுகள்

சோவென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன. சற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து…

பதியப்படாத பதிவுகள் Read More