காதல் ஒரு போர் போன்றது

அலை அலையாய் அவன் நினைவு வந்து, என் மனமலையில் மோதுகையில் சிறு மண்மேடாய் சரிந்து போகிறேன். ஒரு பனி போலக் கரைந்து போகிறேன். நினைவுகளின் தொடுகையிலே உயிர்ப் பூக்களைச் சிலிர்க்க வைக்கின்ற அளவுக்கு அவனுக்கும் எனக்கும் என்ன சொந்தம்? அவனோடு எனக்கென்ன …

காதல் ஒரு போர் போன்றது Read More

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்?

இவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. என் ஊரவன்தான். எனது வீதியில்தான் இவன் வீடும். என் அண்ணனின் நண்பனுக்கு இவன் அண்ணன் என்பதாலோ என்னவோ இவன் மீது எனக்கு ஒரு மதிப்பும் இருந்தது. சின்னவயதில் …

இதில் நியாயங்கள் யார் சொல்லக் கூடும்? Read More

தடம்பதித்தவர்கள்

எமது வாழ்வில் நல்லவிதமாகவோ அன்றில் கெட்டவிதமாகவோ மனதில் தடம்பதித்துப் போனவர் கள் பலர் இருப்பார்கள். அவர்கள் அடிக்கடியோ அன்றில் எப்போதாவதோ எமது நினைவுக்குள் வந்து முகம் காட்டிச் செல்வார்கள். அப்படியாக எனக்குள் முகம் காட்டுபவர்களில் இவனும் ஒருவன்.      இவன் பற்றிய …

தடம்பதித்தவர்கள் Read More

இரயில் பயணங்களில்…

அப்போது எனக்கு 21வயது நிரம்பி யிருந்தது. நான் கர்ப்பமாயிருந்தேன். எனது கணவர் என்னை ரெயினில் ஏற்றி, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவனிடம் எனக்கு ஏதாவது உதவிகள் தேவையாயின் செய்து கொடுக்கும்படி சொல்லி விட்டுச் சென்றார். கொழும்பிலிருந்து கொடிகாமத்திற்குத் தனியாகப் பயணிப்பது …

இரயில் பயணங்களில்… Read More

அவன்

அவன் ஏன் அப்படி நடந்து கொண்டான் என்று எனக்கு இன்று வரை தெரியாது. அன்று பிரயோககணித வகுப்பு முடிந்ததும் Organic Chemistry தொடங்கியது. பதினோராம் வகுப்புக்கான மாஸ்டர் வரவில்லையென்பதால் அந்த வகுப்பு மாணவர்களை யும் எமது 12ம் வகுப்புக்குள் விட்டார்கள். ‘பெப்பே‘ …

அவன் Read More

கரண்டி

‘அக்கா, அக்கா…’ மெல்லிய, இனிய அந்தக் குரல் மணிமேகலையி னுடையது தான். நான் அவசரமாய் எழுந்து எனது அறை மேசையில் ஆயத்தமாக எடுத்து வைத்திருந்த நீள் சதுரத் தட்டை (TRAY) எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். என்னவனும், குழந்தைகளும் இன்னும் கட்டில்களிலேயே. மணிமேகலை வர முன் ஆயத்தமாகி விட வேண்டுமென்ப தால் நான் அரை மணி முன்…

கரண்டி Read More

கெளதமி காத்திருந்தாள்

போர் தொடங்கிய பின்தான் கெளதமி எங்கள் வீட்டுக்கு அருகில் குடிவந்தாள். மாம்பழம் போல ஒருவித மஞ்சள் நிறத்தில் மொழுமொழுவென்றிருந்தாள். அவள் சிரித்தால் முத்துக்களை அடுக்கி வைத்தது போன்ற சீரான அழகிய பற்கள் பளிச்சிடும். நினைத்தவுடன் சிரிக்கவும் தேவைப்படும் போதெல்லாம் கண்களைக் குளமாக்கவும் அவளுக்குத் தெரிந்திருந்தது.

கெளதமி காத்திருந்தாள் Read More

புதனும் புதிரும் – 4

ஸ்வேபிஸ் ஹால் (Schwaebisch Hall) நகரசபைக்கு உட்பட்டதுதான் இல்ஸ்கொபன் (Ilshofen) கிராமம். இது ஸ்வேபிஸ் ஹால் நகரில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் இன்னுமொரு அமைதியான கிராமம். 87 சதவீதமான விவசாய நிலப்பரப்பைக் கொண்டது,  இங்கு 6000க்கு சற்று …

புதனும் புதிரும் – 4 Read More

புதனும் புதிரும் – 3

ஏறக்குறைய 30 சென்டிமீட்டர் நீளத்துக்குக் காய்ந்து போயிருந்த நிலையில் அந்தக் கறை இருந்திருக்கிறது. வீட்டின் வாசலில் இருந்து சமையல் அறைக்குப் போகும் பாதையில் இருந்த இரத்தக்கறை, பார்வைக்கு இலகுவாகத் தெரிந்து விடும் விதமாகவே இருந்திருக்கிறது. ஆனாலும் பொலிஸாரின் கண்களுக்கு ஏனோ அது தெரியாமற் …

புதனும் புதிரும் – 3 Read More

புதனும் புதிரும் – 2

எந்த விசாரணைகளூடும் பொலிசாரால் முன்னேற முடியாமல் இருந்தது.. ஆனால் பத்திரிகைகள் விடவில்லை. அதுவும் உள்ளூர் பத்திரிகை ஓடியோடிச் செய்திகளைச் சேகரித்து, முதன்மைச் செய்தியாக  வெளியிட்டுக் கொண்டிருந்தது. அதிலும் ஒரு நிருபர், ஆழமாக உள்ளிறங்கி, எடித் லாங் இன் உறவுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, …

புதனும் புதிரும் – 2 Read More

என்னைப் பெறாத என் அன்னை!

நான் ஜி.சி.ஈ ஓலெவல் படிக்கும் போது தான் அம்மாவின் (சிவகாமசுந்தரி அம்மா) மூன்றாவது மகளான சந்திரபிரபா எனக்கு அறிமுகமாகி, எனக்குப் பிடித்த நண்பிகளில் ஒருத்தியுமானாள். அவளுடனான நட்புத்தான் நான் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது. அம்மாவையும் அவவின் எட்டுப் பிள்ளைகளையும் நான்…

என்னைப் பெறாத என் அன்னை! Read More

ஒன்று ரெண்டு மூன்று நாலு

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள். ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி நாலுபழம் வாங்கிக் கொண்டு நாங்கள்வரும் வழியில் ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடிவர நம்மை
தேடி ஆறு கல்லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ உருண்டுருண்டு சிரித்துக் கொண்டு ஏழுபேருமாக எட்டு மணி…

ஒன்று ரெண்டு மூன்று நாலு Read More