யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி என். சண்முகலிங்கம், கவிஞர் புதுவை இரத்தினதுரை ஆகியோர் மதிப்புரைகளை வழங்கினர்.
- விடுதலைப்புலிகளின் முதற் தாக்குதல் தளபதியான லெப். சீலனின் பெயரில் உருவானதே சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியாகும்.
இப் படையணியின் ஒரு தசாப்த காலத்தை விபரிக்கும் களப்பதிவுகள், விழுதுகள், உண்மைப் பதிவுகள் ஆகியவற்றை தாங்கியும் இதுவரை சாள்ஸ் அன்ரனி சிறிப்புப் படையணியில் இருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களது பெயர்களைத் தாங்கியும் வெளிவந்துள்ள இந்த நூல், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உட்பட களமுனைத் தளபதிகள் பலரது செய்திகளையும் கொண்டுள்ளது.
இந்த நூல் இன்று கிளிநொச்சியிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் - யாழிலிருந்து தயா பகவன்
1.10.03
நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - ஈழப்போராட்டவரலாறு - வெளியீடு
தயா பகவன்
புத்தகம்/Books/Bücher