|
Eelam -
தொன்மை
|
Written by தி. தவபாலன்
|
Sunday, 09 August 2009 21:24 |
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டு பிடிக்கப்பட்டது.
வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் 68.12 விழுக்காடு இரும்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதேபோன்ற இரும்பு உலை கசடுகள் முறிகண்டி- அக்கராயன் சாலையோரம், கோணாவிலில் அக்கராயன் கழிவாறின் கரையோரம், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தின் கோட்டைகட்டினகுளம் என்பவற்றிலும் கொக்காவிலிலும் காணப்படுகின்றன.
|
Last Updated on Sunday, 09 August 2009 21:43 |
Read more...
|
|
Eelam -
தொன்மை
|
Written by சுகுணன்
|
Tuesday, 11 August 2009 04:08 |
வன்னியின் துணுக்காய் மல்லாவியில் தொல்கால சுடுமண் சிற்பங்கள் உட்பட்ட சுடுமண் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  மல்லாவியின் வயற்பகுதி ஒன்றில் வரம்புப் பாதை துப்பரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கையில் சுடுமண் சிற்பங்கள்,மக்களால் கண்டெடுக்கப்பட்டன. பாதை துப்பரவுப் பணியின்போது மண்வெட்டிகளால் பொருட்கள் உடைபட்டுமுள்ளன. இருந்தும் அப்பொருட்கள் அப்பகுதி மக்களின் விழிப்புணர்வு மிக்க செயற்பாடுகாளால் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டன. |
Last Updated on Tuesday, 11 August 2009 04:13 |
Read more...
|
Eelam -
தொன்மை
|
Written by சுகுணன்
|
Sunday, 09 August 2009 21:23 |
கிளிநொச்சி அக்கராயன் குள காட்டுப் பகுதியில் 3000 ஆண்டுகள் வரை தொன்மையான தமிழரின் பெருங்கற் காலத்துக்குரிய கற்குவை ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அக்கராயன் குளத்தின் அலைக்கரைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நிலை ஆற்றுக் கரையினில் கற்குவை ஈமச்சின்னங்கள் தொல்லியல் தேடலாளர் ந.குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டன.
தமிழரின் சடலம் புதைக்கப்பட்டு அதனைச் சூழ முட்டை வடிவில் இடைவெளியில் கற்கள் அடுக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் கற்குவை ஈமச்சின்னங்களாகும். நிலை ஆற்றுக்கரையில் 9 கற்குவை ஈமச்சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதவிர இப்பகுதியில் சிறிய தட்டைக்கற்களால் உருவாக்கப்பட்ட கற்றகடு ஈமச்சின்னங்களும் உலோக உருக்கு உலைகளும் இவரால் கண்டுபிடிக்கப்பட்டன.
இவையுடன் 'நாக", 'தட" என்ற சொற்களையுடைய தொல் பிராமி தமிழ் எழுத்துக்களைக் கொண்ட உலோக முத்திரையும் ந.குணரட்ணத்தினால் நிலை ஆற்றுக் கரையில் எடுக்கப்பட்டன.
தமிழர் தாயகப்பகுதியில் மிக அதிகளவில் தொல்பொருட்கள் இங்கே காணப்படுகின்றன. இதற்கு அண்மையாக ஐந்து மைல் தொலைவில் ஆனைவிழுந்தான் தொல்மையம் கண்டுபிடிக்கப்பட்டது.
வவுனியாவிலிருந்து சுகுணன் 23.9.2003 |
|
Eelam -
தொன்மை
|
Written by சுகுணன்
|
Sunday, 09 August 2009 21:21 |
வன்னி, கிளிநொச்சி மேற்கு ஆனைவிழுந்தான் குளத்தினுள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண் உருவச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
ஆனைவிழுந்தான் குளத்துக்கு நீர் வழங்கும் ஆற்றின் நீர்தேங்கும் பகுதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் குள அணைக் கட்டுமாணத்துக்காக புல்டோசரால் மண் அள்ளப்படுகையில் மண்படையில் மேலிருந்து சுமார் 3 அடி ஆழத்தில் சுடுமண் சிற்பங்கள் எடுக்கப்பட்டன.
இவற்றுள் 6 அங்குலம் முதல் ஒன்றரை அடி உயரம் வரையான பெண் உருவச் சிலைகளின் பாகங்கள், பெண் உருவச் சிலைகளின் கைகள், மார்பகங்கள், முகம், தாடை, சலங்கை அணிந்த கால்பாதம், தலைகளை இழந்த 6 அங்குல உயர பெண் உருவம், ஆபிரிக்க பழங்குடிகளின் சிற்பக்கலையை நினைவூட்டும் 6 அங்குல உயர |
Read more...
|
Eelam -
தொன்மை
|
Written by சுகுணன்
|
Sunday, 09 August 2009 21:17 |
வன்னி தண்ணிமுறிப்பில் சுடுமண் வளையக் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவின் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்ந்த மக்கள் புதிதாக கிணறு ஒன்றை வெட்டியபோது அதன் ஒரு பக்கத்தில் இரண்டரையடி விட்டத்தில் 8 அடி ஆழம் நேர்த்தியாக தோண்டப்பட்டு அதனுள் அமைக்கப்பட்ட 2அடி விட்டத்தில் 1 அடி உயரமுடைய 3 சுடுமண்வளையங்கள் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்டன.
கிணறு அமைக்கப்பட்ட காலத்தின் பின் அதன் மேல் 3 அடி உயரத்திற்கு வண்டல் மண் வலிமையாகப் படிந்துள்ளது. 2000 ஆண்டுகளிற்கு முற்பட்டதாக இது இருக்கும் எனக் கருதப்படுகின்றது. 1885ல் முல்லைத்தீவு நகரின் வடக்கில் இத்தகைய சுடுமண்வளையக்கிணறு கண்டுபிடிக்கப்பட்டது. |
Last Updated on Tuesday, 11 August 2009 04:16 |
Read more...
|
|
|
|
<< Start < Prev 1 2 Next > End >>
|
Page 1 of 2 |