Eelam -
Heroes
|
Written by Thuvaraga Supramaniam
|
Sunday, 25 November 2018 08:51 |
வடமராட்சியில் இந்திய இராணுவ (IPKF) காலத்தில் கம்பர்மலையில் இருந்து கட்டைக்காடு வரையிலும் ஒவ்வொரு போராளியின் பாதுகாப்பிலும் மிக மிக அக்கறையாக நடந்து கொண்டவன் மொறிஸ். போராளிகளுக்கு நேரடியாகவும் அவனது IC-2N வோக்கி, உருட்டல் மூலம் அலைவரிசை பெறும் தொலைதொடர்பு சாதனம் வாயிலாகவும் தெளிவான கட்டளைகளை வழங்கினான்.
ஓடக்கரை, Collage Road, VM Road... என சிறு வீதிகள் அவனை எப்போதும் நினைவு கொள்ளும். அடுத்த வீதியில் IPKF இன் காவல் ரோந்து அணி நகரும். நாய்கள் அப்படிக் குரைக்கும். எதிர் ஒழுங்கையில் மொறிஸ், வோக்கியின் சுப்பரொட் இழுக்கப்பட்டு அடுத்த நடவடிக்கைக்காகப் பேசிக் கொண்டிருப்பான். பதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன்.
பல இடங்களில் இவர்களை இந்த நிலையில் கண்ட சிப்பாய்கள் தாக்குதல் தொடுக்காமல் நகர்ந்த சம்பவங்கள் அதிகம். ஆனால் மக்கள் அது தமிழ்நாட்டு தமிழ் ஆமி. அதுதான் சுடாமல் போனவர்கள் என்று கதைப்பார்கள். கற்கோவளத்தில் இருந்து (சப்போட்டர்) ஆதரவாளர் ஒருவர் கொண்டு வந்த மதிய சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்துச் சாப்பிடும் போது இதைச் சொல்லிச் சிரித்தான். அப்போது புரைக்கேறி ரொம்ப நேரமானது அவனது கண் சிவப்பு எடுபட. அப்போதும் அவன் AK-M உடனடித் தயார்நிலைக்குக் கொண்டு வந்தான். எங்கள் சந்ததி எங்கள் வீரர்களை அறியவேண்டும்.
- துவாரகா சுப்ரமணியம் 28.11.2016
|
Last Updated on Sunday, 25 November 2018 09:54 |