Literatur -
கவிதைகள்
|
Written by ஜெயரூபன் (மைக்கேல்)
|
Thursday, 27 October 2016 21:20 |

மரணத்திற்காக காத்திருந்த பொழுது, மீள வாழுவதற்கான நம்பிக்கையை நான் பேசினேன். நரம்புகள் செயலிழந்து, தமனிகள் அடைக்கும் இறுதி, அவள் பிரகடனமேதுமின்றி பயணத்திலிருந்தாள். மெல்ல வெளியேறி இறுதிச்செய்திக்காக காத்திருந்த பொழுது மரணம் என்னில் ஏறியது, அவளில் முடிந்தது.
*** இழப்புக்கும், மரணத்திற்கும் நினைவுகளை ஏற்கமுடியாது. ஏற்றவும் ஒண்ணாது. *** பூமியைப்போல எல்லாமே சுற்றலாம், சுழரலாம் மரணத்தின் கையளவை எந்த யயாதியாலும் யவ்வனப்படுத்த முடியாது. *** இழந்தபொழுதை ஏங்கியொரு வாழ்வை எத்தனிக்கும்போது, மரணத்தில் வாழ்வதாக இவளேன் கனவுறுத்த வேண்டும்...? *** எல்லா மூங்கிலும் எரியும்.எந்தவித இசையுமற்று. *** இவளுக்கென புகையும் எந்தத் தணலும் என்னுடன் எரியவேண்டும். எரிதழல் பஸ்மமாகவே...
- ஜெயரூபன் (மைக்கேல்) 2.10.2016
Quelle - Facebook
|
Last Updated on Thursday, 27 October 2016 21:36 |