ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)

திசைகளைச் சுருட்டி தன் கக்கத்தில் அடக்கிக் கொண்டு பிரளயம் காணவீசும் புயற்காற்றுக்குள் ஒரு சின்ன இறகுத்து¡வல் போல பெரியமாமன் வீட்டிலிருந்தும் து¡க்கி எறியப்பட்டான் ராஐ¡.

இரண்டு வருடங்களாக மர்மப்பகையும் மாமா மாமியின் வக்கிரநடத்தையும் அவனது மனதில் கிடந்து ஊறிப்போய் நாறத்தொடங்கி விட்டது. மாமனையும் மாமியையும் பொறுத்தவரை குரைக்கத் தெரியாத சவலைநாய்க்குட்டிக்கு சோறு வைப்பதுமாதிரித்தான் அவனை இந்த இரண்டு வருடங்களும் பேணிக் கொண்டனர்.

வேலைக்கென்று போன இடங்களிலெல்லாம் சண்டையும் சள்ளையும் வலைபோல அமுக்கியதே தவிர ராஐ¡வுக்கு எங்கேயும் நிம்மதி கிடைக்கவில்லை. வெல்·பெயர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது. வெல்·பெயர் கிடைத்த மாதத்தொடக்கத்திலிருந்து பதினைந்து நாட்கள் அவனுக்கு மழை சொரிந்து வயல்நிறையும். பியரும் அலைதலுமாக காசு கரையும்வரை கட்டாக்காலி. மாதக்கடைசி வாரம்மட்டும் கையில் காசில்லாமலாகஇ வீட்டோடு கிடந்து சொந்தங்களைக் கறுவிக் கொட்டுவான்.

ஓடும் நதியில் கிளிஞ்சல்களின் பயணம். ஒவ்வொரு துறைக்கும் புதிய புதிய கஞ்சல்கள் சேர்ந்து இணைந்து ஓடுவது போல இந்த வெற்றுவாழ்க்கையில் நிறைய சினேகிதங்கள் பிடிபட்டன. அப்படி வந்தவன்தான் குமார். ராஐ¡வைப் பொறுத்தவரை குமார் சினேகிதனல்ல துரியோதனனுக்கு தோள் கொடுத்த கர்ணன்மாதிரி.

ஆரம்பத்தில் குமாரின் பின்னால் அலைந்து அவனது நிழலில் எல்லாவற்றையும் பழகிக் கொண்டான். கசினோ நிர்வாணநடனம் லெதர்ஐ¡க்கெட் என்று வெல்·பெயர்க்காசு கரைந்து போனது. காசில்லாத நாட்களில் எங்கும் போகாமல் வீட்டில் அடைந்து கிடக்கும்போது தெருவில் குமாரின் கார் கோர்ண் அடித்து இவனை குமாருடன் தொற்றவைத்துவிடும்.

ஆரம்பத்தில் ராஐ¡வை தனது காருக்குள் இருக்கவிட்டு குமார் இறங்கிப்போய் தனது வாடிக்கைக்காரர்களுடன் கதைத்து அவர்களுக்குத் தேவையான ஹெரோயின் பொட்டலங்களை விநியோகித்து வருவான். அப்படி அவன் தனியனாக வந்து வியாபாரம் செய்வதிலுள்ள அபாயத்தைக் கருதித்தான் தன்னை இணைசேர்த்து கங்காரு மாதிரி காவித்திரிகிறான் என்று அறியாமலே ராஐ¡ நாட்கள் பல இருந்தான்.

பதினாறு து¡ள்ப் பொட்டலம் விற்ற ஒரு சந்தோசநாளில் குமார் ராஐ¡வுக்கு "பார்" ஒன்றில் விஸ்கி வேண்டிக் கொடுத்தான். சந்தோசமாக விஸ்கி அடித்து மிதபோதையின் வீச்சில் நெகிழ்ந்துபோன குமார் ராஐ¡வின் தோளில் கையைப் போட்டு அணைத்தபடி:-

"ராசா நீ மட்டும் என்னோட சேந்து நிண்டா உன்னை எண்ணிப் பத்து மாசத்தில பணக்காரனாக்கிக் காட்டுவன். உன்ரை மாமாமார் எல்லாம் பாத்து பொறாமைப்பட வைப்பன்."

என்று சொல்லி மிக நுணுக்கமாக ராஐ¡வின் பலவீனமான பகுதியில் தட்டி அதிர்வேற்படுத்தினான்.

யாருக்குத்தான் பணக்காரனாகும் ஆசை இல்லை. அதுவும் மாமன்மாரின் பந்தாட்டத்தில் சிக்கி மனம் நைந்துபோன ராஐ¡ வெகு சீக்கிரத்தில் குமாரின் வலையில் விழுந்து போனான். ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே அவன் ராஐ¡வை நம்பத் தயாரில்லை. மாசக் கணக்காக காரில் கொண்டு சுற்றுவதும்இ நம்பகமான வாடிக்கைக்காரரை அறிமுகப் படுத்துவதுமாக துருப்பை நகர்த்தினான்.

இறுதியில் குமாருக்கு கொஞ்சம் கொஞ்சமாக ராஐ¡வில் நம்பிக்கை வரவும் சிறு சிறு ஹெரோயின் பொட்டலங்களைக் கொடுத்து தனது வாடிக்ககையாளரிடம் விற்றுவர அனுப்பினான். நாளடைவில் ஒரு திறமையான விநியோகி என்று தெளிவாகியதும் வியாபாரத்தில் அவனை முழுமையாக ஈடுபடுத்தி இலாபத்தில் சிறுபங்கு கொடுத்தான்.

ஒரு இரவு நித்திரை முழித்து ஒரு மாத வெல்·பெயர்க் காசை உழைத்து விடமுடிந்ததைத் தெரிந்ததும் மெல்ல அந்தப் பக்கம் சாயத் தொடங்கினான் ராஐ¡.

சோவெனப் பெய்யும் மழைதான் இந்தத் து¡ள்க்காசு. து¡ள் அடிப்பவர்களின் தலை போதையேறித் தொங்கித் துவள வியாபாரிகளின் பொக்கட் நிரம்பி வழியும். மாதத் தொடக்கத்தில் வெல்·பெயர்க்காசு வரும் நாளிலும் அதைத் தொடர்ந்த ஒரு வாரமும் அழைப்புக்கு மேல் அழைப்பு பேஐரில் வரும். ஒரு வாடிக்கையாளனே இரண்டு மூன்று தரம் கூப்பிடுவான். போதையேறி அவன் முக்தி பெறும் வரை ராஐ¡வின் பேஐர் நம்பரே அவன் நினைவுகளில் எழுந்த வண்ணம் இருக்கும்.

வாடிக்கையாளர்களின் வட்டத்தில் குமாரின் முகம் மறைந்து போக நீரிலிருந்து கிளம்பும் புதிய அலைபோல ராஐ¡வின் முகமும் இளமை வேகமும் ஏற்கனவே பயிற்சி பெற்றிருந்த தந்திர முறைகளும் வெளியே வந்தது. குமாரிடம் சிறு பொட்டலங்கள் வேண்டுவதைத் தவிர்த்துவிட்டு நு¡றுகிராம் இருநாறுகிராம் ஹெரோயினை ஒரு விலைபேசி வேண்டி தானே பொட்டலமடித்து விக்கத் தொடங்கினான்.

புதிய கார் வந்தது.

கோவித்துக் கொண்டு விலத்திய சின்னமாமன் அடிக்கடி ரெலிபோன் அடித்து சாப்பிடக் கூப்பிட்டான். பெரியமாமி மதுவந்தியின் முதலாவது பிறந்தநாளுக்கு அழைப்புத் தந்தாள். தம்பதி சகிதம் வீடுதேடி வந்து அவனைக் கண்டிப்பாக வரவேண்டும் என்று அன்புமழை பொழிந்து விடைபெறும்போது கைமாற்றாக ஆயிரம் டொலர்ஸ் வேண்டிச் சென்றான் பெரியமாமன்.

திரும்பவும் உறவுகள் தன்னில் அக்கறையெடுத்து ஒட்டிக்கொள்ள அவனது மனத்தில் ஒரு வன்மம் புரண்டு நிமிர்ந்து வளர்ந்தது. இன்னுமின்னும் காசு வேண்டும்.கனடாவில் வீடு வேண்டும்.

பல வசதிகள் வேண்டும். இவர்களின் முன்னால் நான் ஒரு கோபுரத்தில் உட்கார்ந்து குனிந்து பார்க்க வேண்டும்.

நித்திரையைத் துறந்த இரவுகளில் அபாயங்களுக்குள் சுழியோடி அள்ளிச் சேர்த்த பணம் நிறைந்து வர நிறைவும் கூடியது. அவன் தனது கிளைகளைப் பரப்பி வேரூன்றியபோது குனிந்து பார்க்க முடிந்தது. தான் வேரூன்றிக் கொண்ட மண்ணின் குணம் அறியாத வகையில் ஐ¢ஸில் அவனுடன் இணைந்து கொண்டாள்.

மிதமிஞ்சிய மேலைத்தேச நளினமும் நீலக்கண்களும் சிறுகூடுவாகான மேனியும் தாங்கிய பிரெஞ்சுப் பெண்ணான ஐ¢ஸில் ராஐ¡வின் அன்புக்குப் பதில் அவனிடமுள்ள ஹெரோயினுக்கு ஏங்கினாள். ஒரு கொம்பனியில் நல்ல வேலையொன்றில் இருந்து து¡ளுக்குப் பழக்கப்பட்டு பின்னர் அந்த வேலையை இழந்து தனது காதலனை இழந்து எல்லாவற்றையும் இழந்து போனாலும் இந்தத்து¡ள் தரும் கனவுப்போதை அவளுக்கு எப்போதுமே தேவையாக இருந்தது. கையில் காசில்லாத நேரத்தில் கடனுக்குத் து¡ள் கொடுத்த ராஐ¡வின் தயாளகுணம் அவளது நெஞ்சில் காதலாக மாற ஒரு ஷோல்டர் பாக்கிற்குள் அடசிய அவளது உடுதுணிகளுடன் வீடுமாறி ராஐ¡விடம் வந்து சேர்ந்தாள்.

வியாபாரக்காசு முழுவதையும் வீட்டில் வைத்துக் காக்க முடியாத சிக்கல் வந்தபோது சின்னமாமன் வீட்டில் கொண்டு போய்க் கொடுத்தான். நு¡று நு¡று டொலர்ஸ் கட்டுக்களைக் கண்டதும் சின்னமாமி அந்தரத்தில் மிதந்தாள். அடிக்கடி கூப்பிட்டு விருந்து வைத்தாள். அடுத்த மாதமே சின்னமாமன் ஒரு நகைக்கடை திறந்தான். திறப்புவிழாவுக்கு மிக எச்சரிக்கையாக ராஐ¡வைத் தவிர்த்து விட்டான்.

பகல் உறக்கமும் இரவு வியாபாரமுமாக தொடர்ந்த நாளில் சிறுகச் சிறுக ராஐ¡வும் து¡ளுக்கு அடிமையாகி விட்டான். போதையுடன் காதல் புரிவதில் உள்ள கவர்ச்சியை ஐ¢ஸில் அறிமுகப்படுத்திய நாளில் இருந்து து¡ள்போதை இல்லாத காதலும் ஐ¢ஸிலும் இல்லை என்று ராஐ¡வின் மூளையில் பதிவாகிவிட்டது.

சீனியர் காந்தன் தனது மகனின் பிறந்தநாளுக்கு அழைப்புக் கொடுத்தார். வரும் பரிசுகளிலேயே தனதுதான் பெறுமதியான பரிசாக இருக்கவேண்டும் என்ற மிதப்பில் மூன்றுபவுண் சங்கிலியும் கைச்செயினும் குழந்தைக்குப் பரிசாக வேண்டிச் சென்றான்.

தலையாட்டும் நாய்க்குட்டிப் பொம்மையுடன் வந்திருந்த தனது பழைய எதிரி ரஞ்சனை அன்றுதான் சந்திக்க முடிந்தது. ரஞ்சன் இருந்த மேசையில் தனது அலாம் பூட்டிய புதுக்காரின் சாவியை ஸ்ரைலாக எறிந்து விட்டுஇ ரஞ்சனுக்கு அருகே இருந்து "ஹலோ" என்றான்.

அவனது மனத்தில் இன்னும் பழைய கோபம் மிச்சமிருந்தது. இருவரையும் அருகருகே பார்த்ததும்இ சிற்றுண்டி பரிமாறிக் கொண்டிருந்த சீனியர் காந்தன் உடனடியாக ஒரு விஸ்கிப்போத்தலையும் இரண்டு கிளாஸ்களையும் எடுத்து வந்து அந்த மேசையில் வைத்தார்.

பிறந்தநாள் விருந்து முடிந்து ஆட்கள் விடைபெற்றுக் கொண்டிருக்கும்போது முக்கால்வாசி முடிந்த விஸ்கிப்போத்தல் மேசையில் இருந்த மட்டன்ரோலை எடுத்துஇ ரஞ்சனுக்கு அன்பாக ஊட்டிக் கொண்டிருந்தான் ராஐ¡. அந்த உறவு பின்பு எந்த விரிசலுமற்று பல வருடங்களாகத் தொடர்ந்தது. நட்பின் எல்லைக்குள் என்றும் தனது வியாபாரலீலையை உள்நுழைத்து விடாமல் மிகக் கவனமாக காப்பாற்றினான் ராஐ¡.

கத்தியில் நடப்பது போன்ற கவனம் வேண்டிய இந்த நிழல்வியாபாரத்தில் ஹெரோயின் போதையால் சரியான நேரத்திற்கு உடனுக்குடன் வினியோகம் செய்யப் போகமுடியாமல் போய் வாடிக்கையாளர்களிடம் தொந்தரவு ஏற்பட்டு சில சரிவுகளை அடைந்தான் ராஐ¡. வியாபாரத்தைவிட தானும் ஐ¢ஸிலும் து¡ள் அடித்து போதையில் மிதப்பதே வழமையாகி விட்டதில் வரவு குறைந்தது.

இடைக்கிடை அவனது விளிப்பு எச்சரிக்கை தந்தும்இ சறுக்கல்களே சில நாட்களில் சம்பாதிப்பாக இருந்தது. ஓரிரு மாதங்கள் வியாபாரத்தை இடைநிறுத்திவிட்டு பின்னர் தொடருவோமென்று முடிவெடுத்தபோது வாடிக்கையாளர்கள் கைமாறிப்போய் விடுவார்களே என்ற அச்சம் வெருட்டியது.

ஏற்கனவே கொள்முதல் செய்த ஹெரோயின் வேறு அப்பார்ட்மெண்டில் ஒளித்து வைத்திருந்து காரம் குறைந்து போய்க்கொண்டிருந்தது.

வியாபாரத்தை அடியோடு விடுவதா? தொடருவதா? ஏன்று புலிவாலைப் பிடித்தவன் நிலையில் இருந்த ராஐ¡வுக்கு திரும்பத் திரும்பத் து¡ள் அடித்து ஏறும் போதையே நிம்மதியைத் தந்து கொண்டிருந்தது.

- ஜெயரூபன் (மைக்கேல்)

- (தொடர்ச்சி)

Quelle - பதிவுகள் - ஜனவரி 2002, இதழ் 25

Post a Comment - ஏழாவது சொர்க்கம்

ஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)
ஏழாவது சொர்க்கம் - 10(நாவல்)


Drucken   E-Mail

Related Articles

உபதேசம்

விவாகரத்து

பயணம்

தீர்க்கதரிசனம்

சொல்லிச் சென்றவள்

பொட்டுகிளாஸ்

பாதை எங்கே?

பதியப்படாத பதிவுகள்

குண்டுமணி மாலை

விலங்குடைப்போம்

சில நேரங்களில் சில நியதிகள்

விழிப்பு