Literatur -
கவிதைகள்
|
Written by மா.மணிகண்டன்
|
Sunday, 31 October 2010 20:05 |
என் பேனாவோடு எனக்கிருந்த நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது..! சில நேரம் வெட்கப் புன்னகையில் பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது உன்னைப் பற்றிய உரைகளினால்..! உரைகளின் வரிகள் சுருக்கமானால் கண்ணீர் வடிக்கிறது! பேனா!! சட்டையின் பையில் நீல நிறமாய்..! நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும் என்றும் மாறாமல் மட்டுமே உள்ளது..!
அடிக்கடி உன் நிளைவால் துடிக்க மறக்கும் என் இதயத்தை தன் கண்ணீர் கொண்Nடு நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு..! உன்னைப் பற்றிய உரைகளைத் தொடர..!
உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும் நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு புதுப்புது வண்ணங்களை தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது..!
வண்ணங்களை வகைப்படுத்த நாசாவின் விஞ்ஞானிகளின் படையெடுப்பு என் வீட்டின் முன்னே திருவிழாவைப் போல் உள்ளது..!
வாரம் சென்ற பின்னும் தனக்கான வரிகள் மட்டும் இன்னும் வரவில்லையே என்று எண்ணி நேற்றைய மாலை மரணத்தைத் தழுவினானனடி பெண்ணே! என் நண்பன்..!
அவன் போகும் போது உனக்காக எழுதிய கடைசி வார்த்தை கண்ணீருடன் 'என்றும் என்னை மறந்து விடாதே'...!!!
- மா.மணிகண்டன்
|
Last Updated on Monday, 01 November 2010 07:22 |