home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 25 guests online
பெண்கள்

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா..?

- சந்திரவதனா -

புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப் படும் பருவம் அவள் பூப்பெய்தும் பருவம்தான். இது பற்றிய சரியான புரிந்துணர்வு புலத்தில் பல பெற்றோர்களிடம் இல்லை. இந்த நிலையில் நாம் இது பற்றிப் பேச வேண்டியதொரு கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த 21ம் நூற்றாண்டில், இத்தனை தூரம் நாம் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து விட்ட நிலையில் சாமத்தியச் சடங்குகள் அவசியந்தானா? சாமத்தியச் சடங்கு எமது கலாசாரத்தில் ஏன் இடம் பிடித்துக் கொண்டது? - மிகுதி

பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? ஏன் ஒடுக்கப் பட்டாள்..?

- சந்திரவதனா -

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன. பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்.. என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன - மிகுதி

இந்த 21ம் நூற்றாண்டிலும்... புலத்தில் தமிழ்ப் பெண்கள்...

- சந்திரவதனா -

இந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். இவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது. - மிகுதி

விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும்
அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும்

- கருணாகரன் -

எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது. பெண் சமத்துவம் குறித்த கருத்தாடல்கள் செயற்பாடுகள் இன்று தீவிரமான நிகழ்நிலையிலிருக்கின்றன. அல்லது சமூக நிகழ்ச்சித் திட்டத்திலிருக்கின்றன. பெண் எனும் அடையாளத்தை வைத்து சமூகம் பெண்கள் மீது விதிக்கும் நிபந்தனைகளை வெற்றி கொள்ளவும் கூறிய சிந்தனை விழிப்பும் செயற்பாடும் பெண்களிடையே வேண்டப்படுகிறது. - மிகுதி

பெண்ணின் கலாசாரம்

- தாமரைச்செல்வி -

ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலைகள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித்தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப்படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடையாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் பெண்களது எண்ணங்கள், உணர்வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவ வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண்முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே முக்கியமாகிறது. - மிகுதி

போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்களின் ஆளுமை


பெண்கள் காலம் காலமாக அடக்குமுறைக்குள்ளாவது பற்றியும், உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியும் இன்று பல்வேறு தரப்பினரும் விழிப்படைந்து வருகின்றனர். இதனையொட்டிய பல திட்டங்களும், செயற்பாடுகளும் தனிநபர்களாலும், சிறு குழுக்களாலும், நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் இவ விடயத்தில் சற்று விழிப்படைந்துள்ளது. பால்நிலைக்கல்வி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பனவும் நடந்தேறி வருகின்றன. இதனால் பெண்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளதுடன், தமது உரிமைகளைப் பெறும் வகையில் தம்மை முன்னேற்றவும் துணிந்துள்ளனர். மாற்றங்கள் படிப்படியாக நிகழத் தொடங்கியுள்ளது. - மிகுதி


சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 5

- கு. தீபா -

போகுமிடமெல்லாம், கணவனில்லாமல் தனியே வாழும் பெண்கள் அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனது மனைவி பிள்ளைகளைத் துறந்து இன்னொரு பெண்ணுடன் கண்ணெதிரே வாழும் கணவன், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விட்டுப் பிரிந்து சென்று வேறொரு திருமணஞ் செய்து வாழும் கணவன், "வேலையாப் போனவர் வரேல்லை" என்ற காரணத்துடனான கணவன் என்று பலவிதக் கணவன்மார்களை இழந்து பல பெண்கள். பெருந்திரளான மக்கள் நெருங்கி வாழ்வதால் இவ விகிதம் கூடுதலாகத் தென்படுகிறதா அல்லது உண்மையிலேயே சமூகத்தில் சீர்கேடு மலிந்துவிட்டதா என்று ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். பெண்களில் ஒரு சாரார் கணவனின்றித் தனித்து வாழும் துணிவைப் பெற, இன்னுமொரு சாரார் தனதும் குடும்பத்தினதும் கௌரவம் பேண வேண்டி அனைத்து வேதனைகளையும் தாங்கி மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். - மிகுதி

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 4

- கு. தீபா -

சமூகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமூதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். வீடும் நாடும் வளம்பெறும். பெண்ணிலை மாற்றம் தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் யாரது கருத்திற்கும் எட்டாமல் சத்தமேயில்லாமல் புரட்சி ஒன்று நடந்து கொண்டுதானிருக்கிறது. - மிகுதி


சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 3

- கு. தீபா -

கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது. - மிகுதி

விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள்

-அர்த்தநாரி -

பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித்தெரியும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின் இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு தன் மீது வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப்போராடுதல், மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல். - மிகுதி

பெண்களின் ஆளுமை அதிசயம் அல்ல! அதுவே இயல்பு!

- தமிழினி -

உலகம் தாய்மையின் காலடியில் உருள்கிறது எனக்கூறும் உயரிய தலைவனின் வழியில் இன்று தமிழீழப் பெண்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். அவர்களின் ஆளுமை விருத்தியால் உலகின் விழிகள் விரிகின்றன. இன்று தமிழீழப் பெண் தனது தேசத்தின் விடுதலைப்போராட்டத்தில் பங்கேற்றிருப்பதன் மூலம் தனக்கான வாழ்வின் உரிமையையும் அதற்கான கடமையையும் நிறுவி உள்ளாள். அத்துடன் இத்தேசத்தின் விடியலை விரைவாக்குவதன் மூலம் தமிழீழப் பெண்ணின் விடுதலையையும் சாத்தியமாக்கி உலகப் பெண்ணினத்தின் எழுச்சிக்கு தமிழீழப் பெண் புரட்சிக் குறியீடாகியுள. உலகெங்கும் பல்வேறு வடிவங்களில் நடந்தேறி வந்த பெண்ணொடுக்குமுறைப் பிரச்சினைகள் வரையறைகளுக்கப்பாற்பட்ட தீர்க்க முடியாத ஒரு சிக்கலான பிரச்சினையாகவே பலராலும் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தன. சமூக பரிசோதனைக்களத்தில் பெண்ணொடுக்குமுறை பற்றி ஆராய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நடைமுறை வாழ்விற்கு அப்பாற்பட்ட விதண்டாவாதிகளாகவே இனங்காணப்பட்டனர். - மிகுதி

தீர்ப்பெழுதும் கரங்கள் பெண்ணுடையதாகட்டும்

- சிமிழ் -

பெண் தன்னுயிரைவிட அதிகமாக நேசிப்பதும் பாதுகாப்பதும் தனது உடலைத்தான். தனக்குக் கிடைத்த ஒரு புதையலாகவே உடலை அவள் பாதுகாத்துக் கொள்கிறாள். அதில் ஓர் கீறல் விழுவதைக்கூட பெரும் பிரச்சினையாகக்கருதுகிறாள். இவை அழகுணர்ச்சியின் பாற்பட்டு நிற்கும் உணர்வுகளாக இருக்க அதற்கும் அப்பால் தனது கௌரவமே தன் உடலைப் பாதுகாத்துக் கொள்வதில்தான் உள்ளதென்பது அவளது அசையாத நம்பிக்கை. சரியோ தவறோ நுட்பமான உணர்வுகளால் வனையப்பட்டிருக்கும் அவளது எண்ணங்கள் கூட உடலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களால் காயப்பட்டுப்போய் விடுவது வேதனைக்குரியது. தன் உடலை தன் அனுமதியின்றி யாரேனும் பார்ப்பதையோ அன்றி சாதாரணமாகத் தொடுவதையோ கூட விரும்பாத விசமத்தனமான கேலியான வார்த்தைகளைச் சகிக்காத பெண்கள் அவ்வாறான செயல்களைத் தம்மை அவமதிக்கும் அவமானப்படுத்தும் ஒன்றாகவே கருதி விடுகின்றனர். - மிகுதி

சம்பிரதாயங்களைக் கடந்து புதிய பரிமாணத்தில்

- மொறிஸ் தர்மபாலன் -

ஓர் குறிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது ஒன்றுபற்றி, அதன் தனித்துவம், சிறப்புக் கருதி, சமூகத்தில் அதனுடைய தேவையும், விழிப்பும் கருதி அதற்கென ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அந்த நாளை உலகளாவியரீதியில் சிறப்பு நாளாகக் கொண்டாடுவது உலக மரபு. இந்த வகையிலேயே மார்ச் 8, அனைத்துலகப் பெண்கள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது. உலகின் அனைத்து நாடுகளிலும், அதாவது வளர்ச்சியடைந்த நாடு, பின்தங்கிய நாடு என்கின்ற பாகு பாடின்றி எல்லா நாடுகளிலுமே இம் மகளிர் தினம் கொண்டாடப்படுவதைக் கொண்டு இந்த நாளின் தேவைபற்றியும் முக்கியத்துவம் பற்றியும் புரிந்து கொள்ள முடியும் - மிகுதி

பெண்கள் மீதான வன்முறையை எதிர்கொள்வதும் எதிர்ப்பதுவும்பெண்கள் மீதான வன்முறையை எதிர்கொள்வதும் எதிர்ப்பதுமே பெண்கள் இயக்கங்களின் முக்கிய கவனத்திற்குரியதாக இருக்கிறது. பெண்கள் அமைப்புகள், அரசுசாரா நிறுவனங்கள், சட்ட உதவி மையங்கள் என எண்ணற்ற அமைப்புகள் பெண்கள் மீது ஏவப்படும் வன்முறைகள் குறித்து ஆராய்ந்து அவற்றுக்கு எதிராகப் பிரச்சாரங்கள் செய்து வருகின்றன. ஆனால், பெண்களுக்கெதிரான வன்முறை நாளொரு புதுவடிவம் பெற்று, மறக்கப்பட்ட பழைய கொடுமைகள் மீண்டும் புழக்கத்திற்கு வருவதைப் பார்க்கும்போது, பெண்கள் மனதில் பற்பல கேள்விகள் எழுப்பியுள்ளன. இக்கேள்விகளைத் தீவிரமாக ஆராய்ந்து பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து நாம் ஒருங்கிணைந்து போராட தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும் - மிகுதி

Geschichte des Internationalen Frauentages

- Warum am 8. März? -

Das ArbeiterInnenleben am Anfang dieses Jahrhunderts war elend und hart. Am 8. März 1857 waren die Textilarbeiterinnen in New York in einen Streik getreten. Anderen Quellen zufolge wurde der Tag im Gedenken an 129 Arbeiterinnen gewählt. Diese sind im Kampf um bessere Arbeits- und Lebensbedingungen am 8. März 1908 zusammen mit anderen Arbeiterinnen ihrer Textilfabrik Cotton in New York in den Streik getreten. Um eine Solidarisierung der Gewerkschaften und anderer Belegschaften zu verhindern, wurden diese Frauen vom Fabrikbesitzer und den Aufsehern in der Fabrik eingeschlossen. Aus ungeklärten Gründen brach in der Textilfabrik ein Brand aus und zerstörte sie gänzlich. Nur wenigen der eingesperrten Arbeiterinnen gelang die Flucht; 129 Arbeiterinnen starben in den Flammen. - more


பெண்விடுதலை என்றால்... PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by Chandra   
Saturday, 16 April 2016 21:43
பெண்விடுதலை பற்றிய புரிந்துணர்வு இன்றைய காலகட்டத்தில் சற்றுப் பிழையானதாகவே இருக்கிறது. பெண்கள் பல வழிகளிலே முன்னேறி இருக்கிறார்கள்தான். அதை இல்லையென்று நான் சொல்லவில்லை. எங்கள் அம்மம்மாமாரின் வாழ்க்கை முறையை விட எங்கள் அம்மாமாரின் வாழ்க்கை முறையில் வித்தியாசமும், முன்னேற்றமும் தென்பட்டன. எங்கள் அம்மாமாரின் வாழ்க்கை முறையை விட எங்கள் வாழ்க்கை முறையிலே இன்னும் வித்தியாசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. எங்கள் வாழ்க்கை முறையை விட எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை முறையில் இன்னும் அதிக முன்னேற்றங்கள் பரிணமிக்கின்றன.

இன்றைய ஆண்பிள்ளைகள், குறிப்பாக ஐரோப்பியாவில் வளர்ந்தவர்கள் தமது குடும்பம் என்று வரும்போது குழந்தைகளைப் பார்ப்பதிலிருந்து வீட்டிலுள்ள பல்வேறு வேலைகள் வரை மனைவியோடு பங்கெடுத்துச் செய்கிறார்கள். ஆனாலும் இன்ஸ்ரிங்ற் (Instinct) என்ற ஒன்று இருக்கிறதே. அது அவர்களை அறியாமலே சில விடயங்களை அவர்களின் மூளையில் பதித்து வைத்திருக்கிறது. அதிலிருந்து அவர்கள் வெளியில் வர இன்னும் சில காலங்கள் தேவை.

இதே போலப் பெண்களின் மூளையிலும் சில விடயங்கள் பதியப் பட்டிருக்கின்றன. அவைகளிலிருந்து பெண்களும் மீள வேண்டும். தான் அடிமைப் பட்டு இருக்கிறேன் என்பதை ஒரு பெண் உணராத வரை அவளால் விடுதலையையோ, சுதந்திரத்தையோ பெற்று விட முடியாது.
Last Updated on Saturday, 16 April 2016 21:47
Read more...
 
பெண் அடங்க வேண்டுமா? PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Saturday, 16 April 2016 21:40
அடங்குதல் என்பது அன்பு, பாசம், நட்பு, மரியாதை இவைகளுக்குள் அடங்கும் ஒரு விடயம். அதை ஆண் - பெண் என்ற இருபால்களுக்கிடையில் அடக்க நினைப்பது அபத்தம்.

அன்பின் முன்னோ பாசத்தின் முன்னோ அடங்கு என்றோ அல்லது வளைந்து கொடு என்றோ யாருமே யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அன்பின் நெகிழ்ச்சியில் பாசத்தின் இறுக்கத்தில் அது தானே வரும். அதே போலத்தான் நட்பு என்ற தூய்மையான உறவின் போதும் மனங்கள் நட்புக்காய் அடங்கும். அல்லது வளைந்து கொடுக்கும்.

அதை விடுத்து ஆண் என்ற அதிகாரத்துக்கு முன் அடங்குதல் என்ற தேவை ஒரு பெண்ணுக்கு நிட்சயமாக இல்லை. ஏன் ஒரு பெண் அடங்க வேண்டும்? என்ன காரணத்துக்காக அடங்க வேண்டும்?

ஆணின் அடக்குதலும், பெண்ணின் அடங்குதலும் அல்ல வாழ்க்கை. ஆணோ பெண்ணோ மனசு ஒருமித்து, அன்பிலே ஒருவருக்கொருவர் அடங்கி, வளைந்து இன்புற்று வாழ்தலே வாழ்க்கை.

இங்கே பெண் மட்டும் அடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏன்? அதுவும் ஆண் என்ற அதிகாரத்துக்கு முன் அடங்கவேண்டும் என்று ஏன் எல்லோரும் எதிர் பார்க்க வேண்டும். பெண்கள் அடங்கினால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்பதுதான் இன்று பலரது கருத்தாக இருக்கிறது. உண்மையில் இப்படி நினைப்பதே தப்பானது. ஒரு ஆண் தன் மனைவியை அடக்கும் போது அவள் அடங்கி ஒடுங்கி இருந்து விட்டால் அதற்கு அர்த்தம் அவள் சந்தோஷமாக இருக்கிறாள் என்பதா? நிட்சயமாக இல்லை.
Last Updated on Saturday, 16 April 2016 21:48
Read more...
 
புலம் பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம் PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Saturday, 16 April 2016 21:24
புலம் பெயர் வாழ்வில் திருமணமான பெண்களின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை மேலோட்டமாகப் பார்த்திருந்தோம். இனி திருமணமாகாத பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகின்றது என்பதைப் பார்ப்போம்.

திருமணமாகாத பெண்பிள்ளைகளின் எதிர்காலம் கூட பல்வேறு விதமாகவேதான் அமையப் போகிறது. பெற்றோர்களின் தன்மையைப் பொறுத்தே பிள்ளைகளின் நிகழ்காலம் நிர்ணயிக்கப் படுகிறது.

அனேகமான பெற்றோர் கட்டுப்படுத்தி வளர்ப்பது ஒன்றுதான் பிள்ளைகளை நன்னெறிப் படுத்தும் என்று எண்ணி பிள்ளைகளின் முற்போக்கான தன்மைக்கு முட்டுக்கட்டையாக நிற்கிறார்கள். இதனால் பிள்ளைகள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இப்படியான பெற்றோர்களின், பிள்ளைகளின் எதிர்காலம், எதிர்காலம் என்று சொல்வதை விட நிகழ்காலம் மிகவும் கடினமானதாகவே இருக்கும். இவர்களின் திறமைகள் மழுங்கடிக்கப் பட்டு எதிர்காலம் கூட இவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தி, இயல்பாகவே இவர்களிடம் உள்ள தன்னம்பிக்கை குறுகடிக்கப் பட்டு விடும்.
Last Updated on Saturday, 16 April 2016 21:38
Read more...
 
பெண் ஏன் அடக்கப் பட்டாள்..? PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by சந்திரவதனா   
Saturday, 16 April 2016 21:10
எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிரஜையாக எண்ணும் மனப்பாங்கு சமூகத்தில் இருந்து விலகவில்லை. பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போடும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப் படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப் படுகின்றன. அணிகலன்கள் பற்றி ஆராயப் படுகின்றன.

"பெண்களை நாங்கள் வெளியில் போக விடுகிறோம். விரும்பிய உடைகளை அணிய விடுகிறோம். பல்கலைக்கழகம் வரை படிக்க விடுகிறோம். வேலை செய்ய விடுகிறோம். ஏன்.. கணினியில் கூட எழுத அனுமதிக்கிறோம். இன்னும் என்ன வேண்டுமென்று இவர்கள் ஆர்ப்பாட்டக் கொடி பிடிக்கிறார்கள்..?" என்ற ஆணாதிக்கம் தொனிக்கும் கேள்விகள் கூட சில ஆண்களிடம் இருந்து சினத்தோடு எழுகின்றன.

பெண்விடுதலை என்றால் என்ன? அதன் தார்ப்பரியம் என்ன? என்பவை பற்றி சில ஆண்களுக்கு மட்டுமல்ல. பல பெண்களுக்குமே புரியவில்லை. சுயம், சுதந்திரம்... போன்றவற்றின் பொருள் சரியாக உணரப்படுகிறதா என்ற சந்தேகம் அடிக்கடி எழுகிறது.
Last Updated on Saturday, 16 April 2016 21:37
Read more...
 
இலக்­கி­யத்­துக்கு நோபல்­ப­ரிசு வென்ற பெண் படைப்­பாளி நடின் கோர்­டிமர் PDF Print E-mail
Samugam - பெண்கள்
Written by அன்னலட்சுமி இராஜதுரை   
Monday, 10 November 2014 06:56
சிறு­கதை படைப்­பி­லக்­கி­யத்­துக்கு நோபல் பரிசு வென்று உல­கப்­பு­கழ்­பெற்ற கனே­டிய எழுத்­தாளர் அலிஸ் மன்றோ போன்று நாவல் இலக்­கி­யத்­துக்கு நோபல் பரிசு வென்று புகழ்­பூத்­தவர் தென்­னா­பி­ரிக்க எழுத்­தா­ள­ரான நடின் கோர்­டிமர் (Nadien Gordimer)

படைப்­பி­லக்­கி­யத்­தோடு மட்டும் தமது சிந்­த­னை­யையும் ஆற்­ற­லையும் செயற்­பா­டு­க­ளையும் மட்­டுப்­ப­டுத்திக் கொள்­ளாமல் அதற்­கப்பால் அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளிலும் சமூக அபி­வி­ருத்தி விட­யங்­க­ளிலும் காட்­டிய ஊக்கம் அபா­ர­மா­னது.

ஆளும் வெள்­ளையர் வர்க்­கத்தில் பிறந்­தவர் சகல சுக­போ­கங்­க­ளுடன் எழுத்தை ஒரு பொழு­துப்­போக்­காக கொள்­ளக்­கூ­டிய ஒரு தரா­த­ரத்தில் இருந்த ஒரு பெண் படைப்­பாளி தனது இனத்து அதி­கார வர்க்­கத்­தினர் உதைத்து நசுக்­கிய ஆபி­ரிக்க கறுப்­பின மக்கள் மீது கொண்ட இரக்கம் போற்­றத்­தக்­கது. அதுவே அவ­ரது எழுத்தின் பிரத்­தி­யட்சம் மனி­தா­பி­மா­னத்தின் அடிப்­ப­டையில் அமைந்த எழுத்துச் சிற்­பங்­களே நடின் கோர்­டிமருக்கு 1991 ஆம் ஆண்டு இலக்­கி­யத்­துக்­கான நோபல் பரிசை வென்று தந்­தன என்றால் மிகை­யில்லை. இந்த எழுத்து சிற்பி கடந்த ஜூலை 13ஆம் திகதி (2014) தமது தொண்­ணூ­றா­வது வயதில் அம­ர­ரான செய்தி உலகம் அறிந்­ததே.
Last Updated on Saturday, 16 April 2016 21:56
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 Next > End >>

Page 1 of 4