புதுவாசம் தந்த புதுமலரே

படம் நெஞ்சைத் தொட்டு
பாடல்: புதுவாசம் தந்த புதுமலரே


புதுவாசம் தந்த புதுமலரே
புதிதாகப் பூத்தாயா?
எனக்காக நீ மலர்ந்தாயா?
உனக்காக நான் மலர்ந்தேனே
!

பூக்கள் உள்ளத்துக்குள் இன்பத்தை ஊட்டுவன. பூக்கள் தரும் ஸ்பரிசம் ஒவ்வொரு மனித உணர்வுக்கும் உற்சாகத்தை ஊட்டுவன. உணர்வுகளைத் தூண்டி உணர்ச்சியைத் தூண்டும் அது ஒரு இன்பமயமான அனுபவம். ஒரு பெண்மை தன்னுள் மகிழ்ந்து கொள்வதையும், தன்னுள் புகுந்துவிட்ட புத்துணர்ச்சியில் சிலிர்த்து விடுவதையும், புதிதாக அவள் உள்ளத்துக்குள் பூத்த இன்ப அதிர்வையும் பூக்களுள் பூக்களிடம் ஒப்பிட்டுப் பார்க்கின்றார்கள்.

அதோ ஒரு பூ மலர்ந்திருக்கின்றது. பூவின் தோற்றத்துக்குள் தன் புத்துணர்வை இணைத்து புதுமை படைக்கின்றான். இனிய அந்த இன்ப உணர்வை நினைத்து நினைத்து இணைந்து புதுமை படைக்கின்றான். பூவும் பூத்திருப்பது யாருக்காகவோ பூத்திருப்பதுபோல் எண்ணுகின்றாள். ஆனால் அந்தப் பூவின் வாசம் பொறுமைக்குள் ஒப்பிடினும் அவள் அந்தப் பூவின் வாசம் தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணுகின்றாள். சூரியனையும் சந்திரனையும் கண்டு தாமரையும் அல்லியும் மலர்வது போன்று, சூரிய சந்திரனுக்கு இணையான அவனைக் கண்ட அவள் தாமரை அல்லியைப் போன்று அழகனுடனும் முல்லையைப் போன்ற இனிய மணத்துடனும் முகம் மலர்கின்றாள்.

அவளின் தவம் வீணாகவில்லை. அவனின் முகம் பார்ப்பதற்கு பூவாகப் பூத்திருப்பவள் செய்த தவத்தில் அவளின் காதலனின் முகத்தைப் பார்த்து நிற்கின்றாள். அந்தப் புத்தம் புதிய பார்வை நித்தம் கிடைக்கத் தவம் இருந்தாள்.

ஏழைகளிற்குக் கிடைத்த
புதையலைப் போல
தேவதையே நீ எனக்கு


காதலின் உச்சத்தில் கனிந்து விடும் வரிகள் - ஆயிரம் ஆயிரம். இங்கே காதலியை தேவதையாகப் பார்க்கின்றான். அவன் கிடைக்கவொண்ணா புதையலைப் பெற்றது போல மகிழ்ச்சியடைகின்றான். அந்தப் புதையலின் மாணிக்கப்பரல் போல் தன் காதலியை எண்ணி கவி வடிக்கின்றான்.

ஏழு கடல் தாண்டி
நான் ஓடிவருவேனே
உந்தன் நிழல் மீது வசிப்பதற்கு
சூரியன் நான் நிழல் தெரிந்த நிழல் தேடி அறிகையிலேயே
நிழலாகி நான் இருப்பேன்
என்று கூறி அவன் - கைபிடித்தாள். நிழலாகி அவனோடு நிஜமாக இணைந்து விட்டாள். நித்திலத்தில் வேறு பேறுண்டோ – அவளுக்கு

ஆண்டவன் உன்னை எனக்கு கொடுத்துள்ளான். இனிமேல் நீதான் எனக்கு உலகம். என் உடல் பொருள், ஆவியே நீதான் என்கிறாள். அவன் அன்பில் திளைத்த அவள். நான் பிறந்ததே அவனுக்காகத்தான். நான் பிறந்த போதே அவனுக்கென முடிவு செய்யப்பட்டுவிட்டதாக எண்ணுகின்றாள்.

சாகும் போது கூட
ஒரு நொடிக்குள்ளே
உயிர் பெறுதே

மரணத்துயல் எழுந்து என்னை அழிக்கையிலும்
உயிர் துறந்து உடல் தவிர்த்துத் துடிக்கையிலும்
உன் தேன் மொழி கேட்டு விட்டால்
போதும் கிளர்ந்து விடும் என் உயிர்

தாயாக நான் மாறி
உன்னைப் பார்க்கின்றேன்
சேயாக நீ இங்கு என்னைப் பார்க்கின்றாய்


உலகின் புனிதமான அன்பு தாய்ப்பாசம். அந்த அன்புக்கு ஈடினை எதுவுமே இல்லை. அந்த உள்ளத்தை, அன்பை அவன் அவளிடம் பேசுகின்றான். அதை அற்புதமான வரிகளில்க் கூறுகின்றாள். சேயாக நீ இங்கு என்னைப் பார்க்கின்றாய் என்று.

மனதோடு நான் தாங்கும் சோகங்களை
நொடி நேர சிரிப்பினிலே பொடி ஆக்குவாய்

உள்ளத்திலே துன்பம் அழுத்திக் கொள்கையிலே உன் உதட்டோரச் சிரிப்பு உயிர் தந்து அணைத்து நிற்கும். துன்பமும், துயரமும் துவண்டிடச் செய்கின்றது. வினை தூண்ட வாழ்வதாய் நிர்க்கதியற்று நான் நிற்கையில் உன் நினைவின் முகம் சிந்திடும் உன் புன்னகைத் துளிகளில் புத்துயிர் பெறுகின்றேன். அத்தனை ஆற்றலும் அற்புதமாய்க் கொண்டவளே அல்லல் தீர்க்கும் அருமருந்தே. சொல்லுக்குள் அடங்காத இன்பத்தின் சுவையே தேனூறும் செவ்விதழால் முத்தம் அமுதமாய்ப் பரிமாற மாட்டாயோ!

அட காதல் என்னும் பள்ளிக் கூடம் நடக்கின்றதே
இதில் கண்கள் நான்;கும் பாடங்களைப் படிக்கின்றதே

காதல்ப்பள்ளியில் கல்விதரும் ராகம் சுகமான ராகம். ராகத்தோடு இசைமீட்டு பாவத்தைத் தாங்கி நிற்கின்றது உன் இரு விழிகள். புள்ளியிலே வழி மூடுகையில் உன் மனக்கதவுகள் திறந்து என்னைத் தாங்கும் பேரழகே பெருமை கொள்கின்றேன் - உன் அணைப்பில்.

ஆயுளில் பல நாட்கள் தனிமையாகப் போனது உன் பார்வை என்மீது விழும் வரையில். பாழாய்ப்போனதென் வாழ்வு என்று நீ பார்த்தாயோ அன்றே பூத்ததடி புது வாழ்வு. உன் பார்வைக்குள் இத்தனை புதுமைகள் இருக்கமென்று இது வரையில் நான் நினைத்ததில்லை. தேவைதையே உன்னால் சொர்க்கம் ஆனதே என் வாழ்வு.

நுரையீரல் கார்ட் எல்லாம் தவிக்கின்றதே
உன் பேரைத்தினம் சொல்லி ஜெபிக்கின்றதே
என் ஜீவன் எனக்குள்ளே இருக்கின்றது
அது பல நாளாய் உன்னுள்ளே வசிக்கின்றது


இதயம் தவித்துத் துடிக்கின்றது. உன் அன்பின் தேனமுதை அள்ளிச் சுவைக்கின்றது. ஆழ் மனதிது உன் பெயரை உச்சரிக்கின்றதே. ஆன்மாவின்; ஆனந்தம் என் உள்ளத்தே ஜொலிக்கின்றதே. உன் இதயத்தின் தாலாட்டில் என் உயிரும் உள்ளத்துக்குள்ளே உறங்குகின்றதே. ஊள்ளூர உணர்வுகளால் உயிர் இரண்டும் சேர்ந்ததன்றோ.

என் பேச்சும் மூச்சும் ஆசை வெட்கம் நீ தானே
என் இன்பம் துன்பம் வாழ்க்கை யாவும் நீ தானே


என்னுள் ஆடும் உயிர்மூச்சு உன்னால்தானே வாழ்கின்றது. உன்னால் உயிர் வாழும் உடலோ உண்மை உணர்வை உணர்ந்திநிற்க. கருவில் தோன்றி உருவாகி வளரும் வரையில் உலகம் ஏதோ என்றிருந்தேன். உன்னைக் கண்ட பின்னாலே என் உயிரும் மூச்சும் உடலும் உணர்வும் இன்பம் துன்பம் எல்லாமே நீ தானே. உன் நினைப்பில் வாழும் கணமெல்லாம் சொர்க்க வாசல் திறந்திடுதே. இனிய பொய்கையில் நீராடி இன்பம் துய்க்க உணர்வை நான் உணர்கின்றேன்.

ஓரிரு நொடி கூட உன்னை நான் பிரிந்தாலே
உயிர் துறப்பேனே என் செல்லமே


ஒரு நொடி நீங்கின் உயிர் துறந்து உடல் வேறாய்க்கிடப்பதுமாய் உணர்கின்றேன் உண்மையிலே உன்னை இழந்தால் என் உயிர் வாழுமென்று நம்பவில்லை. என் உயிரும் நீதான் என் உலகமும் நீதான். உன்னால் தான் நான் வாழ்கின்றேன். உருவந்தான் இருவராக இருக்கும், அவர்கள் உள்ளத்தால் உமையொரு பாகன் போல ஓருடலில் வாழும் ஈருயிர். இதில் ஓருயிர் பிரிந்தாலும் மற்றொரு உயிர் வாழப் போவதில்லை. காலம் மாறும் கொண்ட கோலம் மாறும். ஆனால் அவர்கள் அன்பு மாறப் போவதில்லை.

- அல்பேட்டா மோகன்

Related Articles