திருடனே தயவு செய்து உன்னைக் காப்பாற்றிக் கொள்

Heidschnucke, ஆடு,
இப்படி ஒரு அறிவிப்பை யேர்மனி Worms நகரத்துப் பொலீஸார் அறிவித்திருக்கிறார்கள்.

அந்த Heidschnucke இன ஆடு நிற்கும் நிலையே கம்பீரமாக இருக்கும். வளைந்த கொம்புகள், வெள்ளைநிறம், அடர்த்தியான ரோமங்கள் என்று அதனிடம் நிறைய அழகு இருக்கின்றன.

ஏப்ரல் 7, 8ம் திகதிகளுக்கான இரவுக்கும் காலைக்கும் இடைப்பட்ட நேரத்தில் தனது Heidschnucke இன ஆடொன்றைக் காணவில்லை என்று அதன் உரிமையாளர் Worms நகரப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கிறார்.

பொதுவாக Heidschnucke இன ஆடுகளை இறைச்சிக்காகவும், அதனது உரோமங்களுக்காகவும் வளர்ப்பார்கள். இங்கே ஆட்டைத் திருடியவனின் நோக்கம் இறைச்சியா? அல்லது உரோமமா? அல்லது இரண்டுமா? என்று பொலிஸாருக்குத் தெரியவில்லை.

களவு போன அந்த ஆட்டுக்கு முதல்நாள்தான் தடுப்பூசி ஒன்று ஏற்றப் பட்டிருக்கிறது. அந்தத் தடுப்பூசியின் மருந்தின் தாக்கம் அதனது உடம்பில் கலந்திருக்கிறது. இப்பொழுது அந்த ஆட்டின் இறைச்சியை உட்கொண்டல் மரணம் விளைவிக்கக் கூடிய நிலைகூட வரலாம். ஆகவேதான், “திருடனே அந்த ஆட்டின் இறைச்சியை தயவு செய்து சாப்பிடாதே. அப்படி ஒருவேளை நீ அதனை உட்கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொள்” என்று பொலிஸார் அவசர வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ஆட்டை அடித்துச் சாப்பிட்டுவிட்டு `உயிர் போகப் போகுதே´ என்று அந்தத் திருடன் பயந்து கொண்டிருக்கின்றானா? `என்ன வில்லங்கத்துக்கு இதை திருடினேன்´ என்று அந்த ஆட்டைப் பார்த்துப் பார்த்து முழுசிக் கொண்டிருக்கின்றானா? `ஆட்டை திரும்பப் பெறுவதற்காக பொலிஸார் நாடகம் போடுகிறார்களா?´ என்று யோசித்துக் கொண்டிருக்கிறானா? தெரியவில்லை.


Drucken   E-Mail

Related Articles

ஆறு வாரங்களில் ஒரு கருவி

இன்னுமொரு வழக்கு

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்

Wie viele Kapuzenträger?

Schlemmen auf hoher See

Im Wasser gefangen