இதயத்தில் நம்பிக்கையுடன் தொடருங்கள்

corona
வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டது. சூரியன் வெளியே வந்து சிரிக்கத் தொடங்கி விட்டான். அதிலும் வார இறுதியில் வெப்பநிலை 20 செல்சியசுக்கும் அதிகமாக இருக்கும் போது யாருக்குத்தான் வீட்டில் இருக்கப் பிடிக்கும்.

காற்பந்து விளையாட்டு, பூங்காவில் உலாவருவது, பார்பிக்யூ செய்வது, பியர் போத்தல்களை உரசுவது என்று வழமையாக வசந்தத்தில் யேர்மனியர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஆனால் இது கொரோனாவின் காலம். இந்த வசந்தம் மகிழ்ச்சியாக இல்லை. கடினமானது. அதுவும் வீட்டுக்குள் முடங்கி இருப்பது எல்லோராலும் முடியாத காரியம். ஆனாலும் வீட்டுக்குள் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டியது கட்டாயம் எனும் நிலை. அந்தக் கட்டுப்பாடுதான் பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதால் அரசாங்கம் அறிவித்திருக்கும் விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

இது மக்களுக்கு எவ்வளவு அசௌகரியமானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதனால் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை உற்சாகப் படுத்த வேண்டிய தேவையும் கடமையும் பொலீஸாருக்கு இப்பொழுது வந்திருக்கிறது.

Rheinland-Pfalz மாநிலத்தின் பொலீஸ்துறை இதற்கொரு உத்தியைக் கண்டு பிடித்து நடைமுறைப் படுத்த ஆரம்பித்திருக்கிறது. பொலீஸாரின் வாகனங்களில் ஒலிபெருக்கிகளைப் பூட்டி "You'll never walk alone" என்ற பாடலை ஒலிபரப்பிய வண்ணம் நகரங்களை வலம்வவலம்வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

Richard Rodgers மற்றும் Oscar Hammerstein இருவராலும் பாடப்பெற்று 1945 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தப் பாடல்.பின்னர் 1963 ஆம் ஆண்டில் Liverpool இசைக்குழுவான Gerry & The Pacemakers, பதிப்பில் மிகப் பிரபலமானது.. இன்றும் இந்தப் பாடல் உதைபந்தாட்ட மைதானத்தில் ஒலிக்கப் படுகிறது. உதைபந்தாட்ட மைதானத்தில் பாடல் ஒலிபரப்பப்படும் பொது உதைபந்தாட்ட ரசிகர்களும் இணைந்து பாடுவார்கள். அதிலும், "உங்கள் இதயத்தில் நம்பிக்கையுடன் தொடருங்கள், நீங்கள் தனியாக இல்லை" என்ற வரிகளை ரசிகர்கள் எல்லோரும் ஒருமித்துப் பாடும் போது நிச்சயமாக அது விளையாட்டு வீர்ர்களை உற்சாகப் படுத்தும்.

ஏற்கெனவே உதைபந்தாட்ட விளையாட்டில் அதீத ஈடுபாடு கொண்ட யேர்மனியர்கள் மத்தியில் இந்தப் பாடல் மிகவும் அறியப்பட்டதால் இதைத் தேர்ந்தெடுத்து வீதி உலாவருகையில் பொலீஸார் ஒலிபரப்புவது மக்களுக்கு தைரியத்தைக் கொடுத்து அவர்களிடையே ஒற்றுமையையும் உருவாக்கும் என நம்பலாம்.


Drucken   E-Mail

Related Articles

ஆறு வாரங்களில் ஒரு கருவி

இன்னுமொரு வழக்கு

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்

Wie viele Kapuzenträger?

Schlemmen auf hoher See

Im Wasser gefangen