பதின்ம வயது Vitor Rafael

துணுக்கு
vitor, corona, 14years, covid-19போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த Vitor Rafaelக்கு 14 வயதுதான் ஆகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.03.2020)  Santa Maria da Feira  மருத்துவமனையில் அவன் காலமாகி விட்டான். அவனுக்கு கொரோனா தொற்றுநோய்த் தாக்குதல் இருந்ததாக வைத்தியசாலையில் உறுதி செய்திருக்கிறார்கள்.

பதின்ம வயதான  Vitor Rafael தோல் அழற்சிக்கு (Skin disease psoriasis) ஏற்கெனவே சிகிச்சை பெற்றிருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட சிகிச்சை எதனால் பலனளிக்கவில்லை என்பதை மருத்துவமனை இன்னமும் தெளிவு படுத்தவில்லை.  அவனின் மரணத்திற்கு கொரோனா வைரஸ் காரணமாக இருந்ததா அல்லது ஏற்கெனவே அவனுக்கு இருந்த தோல் அழற்சியினால் சிகிச்சை அளிக்கும் போது ஏற்பட்ட ஒவ்வாமையா என்பதை பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்கள். எது எப்படியோ Vitor Rafaelஇன் மரணம், ஐரோப்பாவில் கோவிட் -19 இன் இளைய வயதினன் என்ற பதிவில் இப்போது இருக்கிறது.

உதைபந்தாட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்ட Vitor Rafael இன் மரணத்தை அவனது நகரான Aveiro உதைபந்தாட்டக் கழகம் துயருடன் பகிர்ந்திருக்கிறது.
Drucken

Related Articles

நூறாண்டுக்கு மேல் வாழ்க!

நானும் காத்திருக்கிறேன்

பேக்கரிக்குள் ரொயிலற் ரிசு

குறைந்த வயது மரணம்

ஆறு வாரங்களில் ஒரு கருவி

செய்திகள்

இன்னுமொரு வழக்கு