காதல் என்பது எதுவரை?

love, Denmark, Inga“என்னதான் தடைகள் வந்தாலும் உண்மையான காதல் அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி தங்களைச் சந்திப்பதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்துவிடும்” காதலுக்கான ஒரு விளக்கத்தை இப்படிச் சொன்னவர், யேர்மனியில் Nordfriesland பகுதியில் உள்ள Suederlugum இல் வசிக்கும் 89 வயதான Karsten.

Karsten இனின் காதலியின் பெயர் Inga. 85 வயதான Inga டென்மார்க் நாட்டைச் சேர்ந்தவர். கொரோனா நோய்த் தொற்றால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கள் எல்லைகளை மூட ஆரம்பித்ததும் பொழுது யேர்மனியும் டென்மார்ககும் தங்கள் எல்லைகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் மூடிக் கொண்டன.

எல்லைகள் மூடப் பட்டதால் Karstenனாலும் Ingaவாலும் சந்திக்க முடியாமல் போனது. தினமும் சந்தித்து மகிழ்ந்திருந்த இருவரும் தனித்து விடப்பட்ட நிலையில் தவித்துப் போனார்கள். முதுமையால் அவர்கள் இருவரும் தளர்ந்து போயிருந்தலும் அவர்களது காதல் இளமையானது. அவர்கள் காதலிக்கத் தொடங்கி இரண்டு வருடங்கள்தான்.

Karsten தனது நகரத்தில் இருந்து சைக்கிளில் இரண்டு நாடுகளுக்கும் உள்ள எல்லைப் பகுதியான Aventoft வுக்கு வருவது என்றும் Inga தனது நகரன Gallehus வில் இருந்து அந்த எல்லைக்கு காரில் வருவது என்றும் தீர்மானித்துக் கொண்டார்கள்.

இப்பொழுது இருவரும் தினமும் சந்தித்துக் கொள்கிறார்கள். இருவரும் தங்கள் தங்கள் நாட்டு எல்லைகளில் குறிப்பிடப்பட்ட இடைவெளி விட்டு அமர்ந்திருந்து உணவுண்டு, கோப்பி குடித்து, அளவளாவிச் சந்தோசமாக இருக்கிறார்கள். எல்லைகளின் தடை விரைவில் நீங்கி முன்னர் போல் மகிழ்ந்திருப்போம் என இருவரும் தங்கள் நம்பிக்கையுடன் சொன்னார்கள்


Drucken   E-Mail

Related Articles

நானும் காத்திருக்கிறேன்

ஆறு வாரங்களில் ஒரு கருவி

செய்திகள்

இன்னுமொரு வழக்கு

இல்லாமை நீங்க வேண்டும்

சட்டத்தின் முன்னால்

Wie viele Kapuzenträger?