குறைந்த வயது மரணம்

துணுக்கு Zugriffe: 207
julie, Corona, Paris, franceஐரோப்பாவில் மிகவும் குறைந்த வயதில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முதல் பெண்ணாக பிரான்சைச் சேர்ந்த பதினாறு வயதான Julie (16) அறியப்பட்டிருக்கிறாள்.

“உடல் ரீதியாக Julie எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தாள். முதலில் சாதாரண இருமல்தான் அவளிடம் இருந்தது. கடந்த வார இறுதியில் அவளின் நிலைமை மோசமடைந்ததால் திங்கட்கிழமை (23.03.2020) அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவரின் ஆலோசனையின்படி அவளை பாரிஸுக்கு அருகாமையில் உள்ள Longjumeau நகர மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது நிலை மோசமாக இருந்ததால் அவளை உடனடியாக Paris நகரத்தில் உள்ள Necker வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட அதீத முயற்சி பலனளிக்காமல் Julie புதன்கிழமை இரவு மரணமடைந்து விட்டாள். இவ்வளவு வேகமாக எல்லாம் நடந்து விடும் என்று நாங்கள் எதிர்பார்ககவேயில்லை” என்று Julieஇன் மூத்த சகோதரி Manon, Le Parisien பத்திரிகையாளரின் நேர்காணலில் சொல்லியிருக்கிறாள்.

அடுத்த திங்கட்கிழமை (30.03.2020) Julieஇன் இறுதி நிகழ்வு நடைபெற இருக்கிறது.

Drucken

Related Articles

நூறாண்டுக்கு மேல் வாழ்க!

நானும் காத்திருக்கிறேன்

பேக்கரிக்குள் ரொயிலற் ரிசு

பதின்ம வயது Vitor Rafael

ஆறு வாரங்களில் ஒரு கருவி

செய்திகள்

இன்னுமொரு வழக்கு