
அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது. கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது.
“இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இல்லாமல் செய்கிறது என்பது மட்டுமல்லாமல் மருத்துவர்களின் சுமைகளையும் வெகுவாகக் குறைக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது. ஆனாலும் இந்தக கருவிகளை முதலில் அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் அத்துடன் பெரிய பரப்பளவில் அவை விநியோகிக்கப்படவும் வேண்டும்” என்று யேர்மனிய மருத்துவ நிபுணரான Dr. Christoph தனது கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
உலக சுகாதார அமைப்பின் தரங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இந்தக் கருவி 95 வீதம் சரியான முடிவுகளை வழங்க வல்லது என Bosch நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவின் பொறுப்புக்கான நிர்வாக இயக்குனர் திரு Marc Meier அறிவித்திருக்கிறார்.
இந்தக் கருவிக்கான சட்டரீதியான ஒப்புதல் ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என எதிர்பார்ககப்படுகிறது.