ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

அறுபதின் ஆரம்பம் சினிமாவையும், நாடகத்தையும் தங்களது பிரதான அரசியல் ஆயுதமாக திமுக பயன்படுத்திக் கொண்டிருந்த காலம்.

அப்பொழுது அறிஞர் அண்ணாவின் மேடை நாடகங்களில் நடிகை பானுமதி நடித்துக் கொண்டிருந்தார் .

“உங்கள் நாடகங்களில் அதிகமாக பானுமதியே நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா?” என்று ஒரு நிருபர் கேள்வி கேட்க, அண்ணாவின் பதில் இப்படி இருந்தது. “பானுமதியும் படிதாண்டா பத்தினி இல்லை. நானும் முற்றும் துறந்த முனிவன் இல்லை " அண்ணாவின் இந்தப் பதிலால் அன்று பானுமதி என்னென்ன சிக்கல்களையும் வேதனைகளையும் அனுபவித்தார் என்பது பற்றிய சிந்தனை அன்றைய ஆணுலகத்துக்கு தேவையில்லாதது.

கண்ணதாசன் தனது அனுபவங்களை மட்டுமல்ல, தனது தேவைகள், அரசியல் எல்லாவற்றையும் சாமர்த்தியமாக சினிமாப் பாடல்களில் எழுதி விடுவார். அவரிடம் ஒளிவு மறைவு இருக்கவில்லை. இரத்தத்திலகம் திரைப்படத்தில் தனது தன்மையை பாடலாக எழுதியிருந்தார். கே. வி. மகாதேவன் இசையில் ரி. எம். சௌந்தரராஜன் பாட, படத்தில் அந்தப் பாடற்காட்சியில் அவரே நடித்தும் இருந்தார்.

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்


https://youtu.be/1vuD1CLIy9E

கவியரசக்கு இருந்த துணிவு கவிப்பேரரசுக்கு இல்லை.

- கவி அருணாசலம்
20.10.2018

Quelle- yarl.com

Related Articles