
ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டில் சைவம். எனது மூத்த அண்ணா "பின்னேரம் ஜந்து மணியளவில் பத்து பார்சல் சாப்பாடு வேணும்" என்றார். அம்மாவும் "ஓகே, எல்லாம் எங்கள் பிள்ளைகள்தானே" என்று கருவாடும் வெந்தயமும் போட்டு குழம்பும் வைத்து, கூப்பன் மா பிட்டும் அவித்துக் கொடுத்து விட்டார்.
"அம்மம்மா வீட்ட போறன்" எண்டு சொல்லிப் போன எனது அண்ணா இரவு முழுவதும் வரவில்லை. அப்பா வேலியால் எட்டி எட்டிப் பார்த்து "மூத்தவனை இன்னும் காணேல்லை" எண்டு அம்மாவிடம் புறுபுறுத்தார்.
இந்த நாள் பின்னேரம், நானும் தம்பியும் ஆத்தியடி ஒழுங்கையில் கிறிக்கற் விளையாடிக் கொண்டு இருந்தோம். தாங்கள் நாளை சாகப்போறோம் என்று தெரிந்தோ தெரியவில்லை. எங்கள் கூட அவர்கள் விளையாடினார்கள். எங்களுக்கு அவர்களைக் கண்டாலே சந்தோசம்தான்.


எனது மூத்த அண்ணாவைக் காணவில்லை. அம்மா கத்துறா 'மூத்தவனே' என்று. 'பிள்ளையாரப்பா, முதலி அம்மா' என்று அம்மா பக்கத்துவீட்டுக் கடவுளுகளை கூப்பிடுகிறா. ஒரே ஜீப் சத்தம். இந்தியன் ஆமி எல்லாற்ற வீடுகளுக்கும் வந்திட்டான். எனக்கோ ஒரு சந்தேகம். அம்மா 'மொறிஸ் அண்ணாக்களுக்கு ஏதோ நடந்திட்டு' எண்டு சொன்னேன்.
அரை மணத்தியாலம் கழித்து கேள்விப்படுகிறேன் ´அண்ணாக்களை சுற்றிவளைத்து சுட்டு விட்டாங்களாம்´ என்று. அது வேறு யாரும் அல்ல. முதல் நாள் எங்க கூடகிறிக்கற் விளையாடின எனது மண்ணின் உறவுகள்.
கப்டன் மொறிஸ் அண்ணா வடமராட்சி மண்ணில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர். எல்லோருடனும் பண்பாகவும் பழகுவார். படித்த பண்பான குடும்பத்தில் பிறந்தவர். பல அறிவுரைகள் கூறுவார். இந்தியன் ஆமிக்கு மொறிஸ் எண்டாலே கலக்கும். சில உறவுகளுக்கு அவரைப் பிடிக்காது. அவர்களே சாப்பாத்திக்கு அடிமை ஆகிக் காட்டிக் கொடுத்தார்கள். இதை எழுதும் போதும் கண் கலங்கியே எழுதுகிறேன். இவர்களைப் பற்றி இனிவரும் காலங்களிலும் எழுதுவேன்.
கப்டன் மொறிஸ், லெப் ரம்போ, வீரவேங்கை சிறி இந்த மூன்று மாவீரர்களும் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு காவியமாகிப் போனார்களே!
உங்கள் கல்லறைகளும் கரித்தரிக்கும்
உங்கள் கனவுகள் நிறையும் வரை
இறுதிவரை உறுதியோடு பயணிப்போம்
- குமணன் முருகேசன்
சுவிஸ்
01.05.2018
Para Paran: அந்த நாள் போராட்ட அனுபவங்களை மறக்க முடியாது.. மூவருக்கும்.. கூடவே இன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் நினைவு கூறுவோம். |
Rock Senthil :இந்த முரட்டு புலியின் அடியை சிறுவயதில் பார்த்தேன். நான் மணியம் டியுசனில் படித்துக்கொன்டிருந்த சமயம் காலை 1 ம் கட்டை சந்தியில் மறித்து தாக்கிய போது... இன்றும் மறக்கமுடியாது. இந்த வீரம் விளைந்த மண் வடமராட்சி அண்ணா நம் இனமே தலைவணங்கும் |
Siva Ponna: ரம்போ, சிறி, மொறிஸ் அப்படி அந்தச் சிறு வயதில் கேட்ட ஞாபகம்... ஆனால் இப்போது தான் புரிகிறது அவர்கள் இவ் உலகில் வாழ்ந்த காலமும் நிகழ்த்திய சாதனைகளும் தியாகங்களும். வீர வணக்கம். |
Umakanthan Sivasubramaniam: எனக்குக்கும் அந்த நாள் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அந்த நாளையும் மொறிஸ் அண்ணாவையும் என்னால் மறக்க முடியாது. நான் அதிகாலை நேரத்தில் ரியுசனுக்கு போகும் போது "தம்பி, இராணுவம் மெயின் றோட்டில நிக்குதா என்று பார்த்துச் சொல்வாயா?" என்று கேட்ட பொழுது. "ஓம் அண்ணா" என்று ஓடிப்போய் பார்த்துவிட்டு. "இராணுவம் ஒன்றும் றோட்டில இல்லை" என்று சொன்னது இப்ப மாதிரி இருக்கிறது. 30 வருடங்கள் ஓடிவிட்டதை நம்பமுடியாமல் இருக்கிறது. அன்றைக்கு சனம் மொறிஸ் அண்ணா வி.ம் றோட்டால 2 துவக்க தோளில் கொழுவிக்கொண்டு போனதாகவும். பின்பு இல்லை 4 துவக்க தோளில் கொழுவிக்கொண்டு என். ம் லேனுக்கால போனதாகவும் கதைத்த போது மனதுக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தது. அவரின் உடல் மந்திகை ஆஸ்பத்திரியில் இருக்கிறது என்ற செய்தி கேட்டபோது நேஞ்சு வலித்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது |
Sockalingam Thavarajah ஐயனார்.கலட்டி N.M.lane சந்தியில் மூவரின்வித்துடல்களும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும் போது இந்திய இராணுவத்தின்மீது புலிகளின் பதில் பழிவாங்கும் தாக்குதல், மூவரின் வித்துடல்களும் திக்கமுனையில் தீயுடன் சங்கமாக வீடு திரும்பிய குமாரசாமி நரசிங்க வயிரவகோவில் ஐயனார் காலடியில் இந்திய படையினரின் சூட்டில் பலியான நினைவுகள்... மனதை வாட்டுகிறது. |
Kumanan Murugesan இவருடன் நானும் எனது குடும்பமும் சென்றவேளை நடந்தது எங்கள் கண்முன்னே குமாரசாமி மாமாவும் இறந்தார் எனது அப்பா மயிர்இளையில் தப்பினார் கண் கலங்கிறது. |
Rajan Rangan Our military salutations for the fallen heroes cap Morris, Lt Rambo & the cadre Sree.... |
Ami Amirtharaj - ஊருக்குப் போக விருப்பமில்லை இந்தியத்தால் சிந்திய இரத்தம்" மொறிஸ்" என்று சொன்னால் ஊருக்கே தெரியும்! அப்போது இந்தியனுக்கும் நன்றாய்த் தெரியும்! வல்லரசுக் கனவான்களின் கனவுகளுக்கு, அவன் விட்ட வேட்டுக்கள்தான் வேட்டுவைத்தன! ஒரு வீரனின் பெயரைக்கேட்டே அஞ்சியது இந்தியம்!! |
கோமகன் பல தடவை முயன்று தோற்றுப் போனவர்களோடு தமிழினத்தின் சாபக்கேடாம்... துரோகமும் கூட்டுச்சேர்ந்தது! துரோகம் காட்டிக் கொடுக்க... சுற்றிவளைத்த சூழ்ச்சி வலையில், பலநூறு துப்பாக்கி முனைகள் அவனைக் குறிபார்த்து நின்றன! அஞ்சா நெஞ்சன் அவன்..! நேரெதிர் நின்றான் அஞ்சாமல்!! இலங்கையின் சுதந்திரம் தொட்டு இன்றுவரை துரோகத்தனம்தான் ஆட்சி செய்தது என்பது கசப்பான உண்மை |