
எனது அன்புத் தங்கை உமையாம்பிகையின் நினைவாக...
எமது பெற்றோருக்கு நாம் நான்கு பிள்ளைகள். நாம் பருத்தித்துறையில் உள்ள ஆத்தியடி என்னும் ஒரு அழகிய ஊரில் பிறந்து வளர்ந்தோம். எங்கள் அம்மாவின் தந்தை பெயர்பெற்ற வைத்தியர், வேலுப்பிள்ளைப் பரியாரியார். அம்மாவின் தாயார் வேதநாயகி. நாங்கள் அம்மாவின் தந்தையை 'அப்பா' என்றும், அம்மாவின் தாயை 'பெத்தம்மா' என்றும் அழைப்போம். ஆத்தியடி முழுக்க எங்கள் அப்பாவினதும், பெத்தம்மாவினதும் சொந்தங்கள்தான். எங்களது அம்மா அவர்களுக்குக் கடைசிப் பிள்ளை. அம்மாவுடன் கூடப்பிறந்தவர்கள் அன்னபூரணி(பெரியம்மா), புரொக்றர் பரம்சோதி(மூத்தமாமா), சேவையர் திருநாவுக்கரசு... மேலும்
நான் இந்தியாவின் சேரிகளில் வளர்ந்தேன். தற்போது ஒரு விஞ்ஞானியாக இருக்கிறேன்
நான் விலங்குகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு புத்தகத்தை இடுக்கிக் கொண்டு எங்கள் வீட்டின் தகரக் கூரைக்கு ஒரு ஏணிப்படியில் ஏறினேன். அப்போது எனக்குப் பத்து வயது. அப்போதுதான் என் முழுக் குடும்பத்துக்கும் சமையல் செய்து முடித்திருந்தேன். அது என் தினசரிக் கடமை. எங்கள் வீட்டுக் கூரையிலிருந்து எங்கள் சேரி முழுதையும் பார்க்க முடியும். நாங்கள் வசித்த சேரி இந்தியாவில் ஒரு சிறிய நகரத்தில் இருந்தது. ஆனால் அது என்னைக் கூரைக்கு இழுத்துச் செல்லவில்லை. எங்கள் வீட்டில் விளக்கு இல்லாத்தால் புத்தகம் படிப்பதற்கு எனக்கு சூரிய வெளிச்சம் தேவைப்பட்டது. நான் ஒரு விஞ்ஞானியாக மாறுவதற்கு அந்தப் படிப்பு வழக்கம்தான் பயணச்சீட்டாக இருந்தது... மேலும்
Dr. சிதம்பரப்பிள்ளை தவசீலன்
அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் வாழும் மருத்துவர் தவசீலன் (Dr Sithamparapillai Thavaseelan) அவர்கள் தான் பணியாற்றும் மருத்துவத்துறையில் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் Queen’s Birthday 2020 Honours List யில் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை நேற்று முன்தினம் (8 June 2020) பெற்றுள்ளார். மருத்துவர் தவசீலன் பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்... மேலும்
காஸ்ரோ (வீ.மணிவண்ணன்)
எனக்கு முன்னால் சில அடிகள் இடைவெளியில், ஒரு கதிரையில் காஸ்ரோ (வீ.மணிவண்ணன்) அமர்ந்திருந்தார். கஸ்ரோவுக்கு இடுப்புக்குக் கீழே இயக்கமில்லை என்பதை நான் முன்பே கேள்விப்பட்டிருந்தேன். ஒரு விடயத்தைக் கேள்விப்படுவதற்கும் நேரே பார்ப்பதற்கும் இடையில் உள்ள பரிமாணங்கள் வேறு வேறு. இடுப்புக்குக் கீழே உணர்வுகள் இல்லாமல், சிறு சிறு விடயத்திற்கும் மற்றையவர்களின் உதவியை நாட வேண்டிய நிலையில் இந்த வாழ்வு எப்படி இருக்கும்? நான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனது எண்ணங்கள் சுற்றிச் சுற்றி கஸ்ரோவின் உடலைப் பற்றியே இருந்தன. அவரைப் பார்க்க மலைப்பாகக் கூட இருந்தது. அவர் இருந்த கதிரைக்குக் கீழே வயர்கள் ஓடிக்கொண்டிருந்தன. இது ஒரு வாழ்வா என்ற யோசனை கூட வந்தது... மேலும்